உனக்காக உன் அன்னை
தூக்கமில்லை
துக்கமில்லை
பசியில்லை
புசிப்பதுமில்லை
உணவில்லை என்பது இல்லை
உண்ணவும் தான் முடிவது இல்லை
நினைவில்லை
கனவில்லை
கனவெது நினைவெது
ஒன்றுமே விளங்கவில்லை
உணர்வுகள் தூங்கவில்லை
உண்மையும் உன்னையும்
பிரிக்கவில்லை
பாலும் தேனும் சுவையில்லை
பத்தியத்திற்கு குறைவில்லை
பாசத்திற்கு என்றும் அளவில்லை
பரவசம் துளியும் குறையவில்லை
உன்முகம் பார்த்திட
உன்குரல் கேட்டிட
என்போல் உனக்கும்
பாசம் பொறுக்குதில்லையோ???
உன் துடிப்பு குறையவில்லை
உனக்காக துடிக்க நான் மறப்பதில்லை
இப்பிரபஞ்சம் நீ காண
என் பிரபஞ்சமே உன்னை நான் காண
காலங்கள் கழிய
மலரே நீ மலர
உன் வருகைக்காக
காத்திருக்க முடியவில்லை
காத்திருப்பு முடிய
வெகு காலமில்லை
என் ஆசைகள்
நிறைவு பெற
புது புது ஆசைகள்
நிறைய பிறக்க
நீ பிறக்கும்
அந்த பொன் நாளை
எதிர் பார்த்து
உன் அன்னை
~என்றும் அன்புடன் ஷாகி 💝