அம்மா

செல்லம் கொஞ்சுகையில் -அன்றலர்ந்த மலர்
கோபம் கொள்கையில் – ஆதவன்
எங்கள் வீட்டு – இகன்மகள்
வேண்டியதை கொடுக்கும் – ஈசன்
செய்யும் செயல்களுக்கு – உறுபடை
தடுமாறும் நேரங்களில் – ஊன்றுகோல்
ஈகை குணத்தில் – எழினி
வெற்றியின் பாதையில் – ஏணி
உறவினர் அனைவரும் – ஐயள்
அறியாமையை விலக்கும் – ஒளி
மகிழ்ச்சி வண்ணமளிக்கும் – ஓவியன்
மனக்காயங்களை போக்கும் – ஔடதம்
ஆதியும் அந்தமுமாய் பொருளற்ற
என் மெய்க்கு உயிர் நீ அம்மா….

எழுதியவர் : தமிழ் சுதந்திரா (8-Apr-18, 2:52 pm)
Tanglish : amma
பார்வை : 1513

மேலே