சௌமியா கிருபாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சௌமியா கிருபாகரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Jan-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 310 |
புள்ளி | : 15 |
உன்னை போல் ஒருவன்
உன் அழகை வர்ணிக்க உவமைத் தேடி உண்மைத் தெளிந்தேன்..
அழகிற்கே உவமை நீயடி கண்ணம்மா!!
அன்புடன் அரவணைக்கும்
தமக்கையும் தாயே
துவளுகையில் துணைநிற்கும்
தந்தையும் தாயே
பரிவுடன் பாதுகாக்கும்
தமையனும் தாயே
மனைவியை சரிபாதியென நடத்தும்
கணவனும் தாயே
கணவனை சேயென தாங்கும்
மனைவியும் தாயே
மருமகளை மகளென நினைக்கும்
மாமியாரும் தாயே
மாமியாரை மாற்றாந்தாயாய் நினைக்காத
மருமகளும் தாயே
ஆபத்தில் உதவுகின்ற
நண்பர்களும் தாயே
இல்லார்க்கு உணவிடும்
பண்புகொண்டாரும் தாயே....
பெண்பாலை மட்டும் குறிக்கும் சொல்லல்ல - 'தாய்'
பிறஉயிரிடம் அன்பு செலுத்தும் அனைத்துயிரும் தாயே
நமக்குள் உள்ள தாய்மையை வெளிக்கொணர்வோம்
மனிதத்தை போற்றுவோம்
தாய்மையை போற்றுவோம்!!
அன்புடன் அரவணைக்கும்
தமக்கையும் தாயே
துவளுகையில் துணைநிற்கும்
தந்தையும் தாயே
பரிவுடன் பாதுகாக்கும்
தமையனும் தாயே
மனைவியை சரிபாதியென நடத்தும்
கணவனும் தாயே
கணவனை சேயென தாங்கும்
மனைவியும் தாயே
மருமகளை மகளென நினைக்கும்
மாமியாரும் தாயே
மாமியாரை மாற்றாந்தாயாய் நினைக்காத
மருமகளும் தாயே
ஆபத்தில் உதவுகின்ற
நண்பர்களும் தாயே
இல்லார்க்கு உணவிடும்
பண்புகொண்டாரும் தாயே....
பெண்பாலை மட்டும் குறிக்கும் சொல்லல்ல - 'தாய்'
பிறஉயிரிடம் அன்பு செலுத்தும் அனைத்துயிரும் தாயே
நமக்குள் உள்ள தாய்மையை வெளிக்கொணர்வோம்
மனிதத்தை போற்றுவோம்
தாய்மையை போற்றுவோம்!!
காதலன்: எந்த நொடி உனக்கு என்மீது காதல் பூத்தது?
காதலி: என் தாய் தந்தையிடம் உணரும் பாதுகாப்பு உணர்வை உன்னிடம் உணர்ந்த நொடி!!
காதலன்: எந்த நொடி உனக்கு என்மீது காதல் பூத்தது?
காதலி: என் தாய் தந்தையிடம் உணரும் பாதுகாப்பு உணர்வை உன்னிடம் உணர்ந்த நொடி!!
அன்புடன் அரவணைக்கும் தாயுமானவனாய்
அரணாய் துணைநிற்கும் தமையனாய்
பெரியோர் விரும்பும் தனையனாய்
பிறர்க்கு உதவும் தன்னார்வலனாய்
அயர்ச்சியின்றி உழைக்கும் தருணனாய்
நல்வழியில் நடத்தும் தளவானாய்
அன்பால் ஆளும் தம்மானாய்
தற்பெருமைக் கொள்ளா தரணிபனாய்
நான் காணும் தற்பரனாய்
தந்தையே என் தரணியாய்!!
முற்பிறவியில் நாங்கள் செய்த நன்மை
இப்பிறவியில் எங்கள் தந்தையாய் நீங்கள்
கண் அசைவிலே எங்கள் ஆசைகளை பூர்த்தி செய்வாய்
நிராசை ஏதுமில்லை அதனால் மறுபிறவி தேவையில்லை
அயர்ச்சி இன்றி உழைத்து - வாழ்க்கையில்
வென்ற சுயம்பு நீங்கள்!
கர்வம் கொள்கிறோம் நீங்கள் எங்கள் தந்தை எனும்பொழுது
என்றும் உங்கள் வழிகாட்டுதலுடன் நடப்போம்
இவர்கள் என் பிள்ளைகள் என நீங்கள் கர்வம் கொள்ளும் நாளுக்காக....
செல்லம் கொஞ்சுகையில் -அன்றலர்ந்த மலர்
கோபம் கொள்கையில் – ஆதவன்
எங்கள் வீட்டு – இகன்மகள்
வேண்டியதை கொடுக்கும் – ஈசன்
செய்யும் செயல்களுக்கு – உறுபடை
தடுமாறும் நேரங்களில் – ஊன்றுகோல்
ஈகை குணத்தில் – எழினி
வெற்றியின் பாதையில் – ஏணி
உறவினர் அனைவரும் – ஐயள்
அறியாமையை விலக்கும் – ஒளி
மகிழ்ச்சி வண்ணமளிக்கும் – ஓவியன்
மனக்காயங்களை போக்கும் – ஔடதம்
ஆதியும் அந்தமுமாய் பொருளற்ற
என் மெய்க்கு உயிர் நீ அம்மா….