என் தந்தைக்கு

முற்பிறவியில் நாங்கள் செய்த நன்மை
இப்பிறவியில் எங்கள் தந்தையாய் நீங்கள்
கண் அசைவிலே எங்கள் ஆசைகளை பூர்த்தி செய்வாய்
நிராசை ஏதுமில்லை அதனால் மறுபிறவி தேவையில்லை
அயர்ச்சி இன்றி உழைத்து - வாழ்க்கையில்
வென்ற சுயம்பு நீங்கள்!
கர்வம் கொள்கிறோம் நீங்கள் எங்கள் தந்தை எனும்பொழுது
என்றும் உங்கள் வழிகாட்டுதலுடன் நடப்போம்
இவர்கள் என் பிள்ளைகள் என நீங்கள் கர்வம் கொள்ளும் நாளுக்காக....

எழுதியவர் : தமிழ் சுதந்திரா (13-Apr-18, 9:46 am)
Tanglish : en thanthaikku
பார்வை : 3281

மேலே