எல்லாம் நீ

அன்புடன் அரவணைக்கும் தாயுமானவனாய்
அரணாய் துணைநிற்கும் தமையனாய்
பெரியோர் விரும்பும் தனையனாய்
பிறர்க்கு உதவும் தன்னார்வலனாய்
அயர்ச்சியின்றி உழைக்கும் தருணனாய்
நல்வழியில் நடத்தும் தளவானாய்
அன்பால் ஆளும் தம்மானாய்
தற்பெருமைக் கொள்ளா தரணிபனாய்
நான் காணும் தற்பரனாய்
தந்தையே என் தரணியாய்!!

எழுதியவர் : தமிழ் சுதந்திரா (14-Apr-18, 5:39 pm)
Tanglish : ellam nee
பார்வை : 497

மேலே