பாலினமற்ற சொல் - தாய்
அன்புடன் அரவணைக்கும்
தமக்கையும் தாயே
துவளுகையில் துணைநிற்கும்
தந்தையும் தாயே
பரிவுடன் பாதுகாக்கும்
தமையனும் தாயே
மனைவியை சரிபாதியென நடத்தும்
கணவனும் தாயே
கணவனை சேயென தாங்கும்
மனைவியும் தாயே
மருமகளை மகளென நினைக்கும்
மாமியாரும் தாயே
மாமியாரை மாற்றாந்தாயாய் நினைக்காத
மருமகளும் தாயே
ஆபத்தில் உதவுகின்ற
நண்பர்களும் தாயே
இல்லார்க்கு உணவிடும்
பண்புகொண்டாரும் தாயே....
பெண்பாலை மட்டும் குறிக்கும் சொல்லல்ல - 'தாய்'
பிறஉயிரிடம் அன்பு செலுத்தும் அனைத்துயிரும் தாயே
நமக்குள் உள்ள தாய்மையை வெளிக்கொணர்வோம்
மனிதத்தை போற்றுவோம்
தாய்மையை போற்றுவோம்!!