உண்டியல்

சிறுக சிறுக சேத்தி வச்சேன்
சீனி மிட்டாய் வாங்கி திங்க

நாள்கணக்கா தள்ளி போட்டேன்
நாணயமும் கூட சேர

அப்பப்போ குலுக்கி பாத்தேன்
அழகா சில்லரைங்க துள்ளி குதிக்க

மாசம் சில ஓட்டிவிட்டேன்
மளமளவென உண்டியல் ரொம்பிவிட

இதோ.... இன்னைக்கு உடைக்க போறேன்
தம்பி தங்கை கூட நிக்க...

அண்ணா... எனக்கொண்ணு வேணும்
வாங்கி தரயா


வாய்விட்டே கேட்டுவிட்டான் தம்பியும்
வருத்தமாய் நின்றிருந்தாள் தங்கையும்

ரெண்டு பேரும் சொல்லுங்க...
யார்யாருக்கு என்ன வேணும்

எனக்கு திருவிழா கார் பொம்மை
என தம்பி கத்த..

எனக்கொரு ஜோடி கம்மல்
என தங்கை கெஞ்ச...

எனக்கென்ன தேவையென மறந்தே போனேனே..
என் உடன்பிறப்புக மகிழ கடைவீதி போனேனே...

தம்பிக்கு கார் வாங்கியாச்சு
தங்கைக்கு கம்மல் வாங்கியாச்சு

மீதமுள்ள பத்து ரூபாய்க்கு
மீண்டுமொரு உண்டியலும் வாங்கியாச்சு!!!

எழுதியவர் : ஷாகிரா பானு (15-Jun-22, 9:44 pm)
Tanglish : undiyal
பார்வை : 1338

மேலே