இறைவனின் தவறு

இறைவனே இறைவனே......
எனக்கு ஏன் இந்த சோதனை..!!!
மதிக்கின்றேன் உனை தினம் துதிக்கின்றேன்.....
இருந்தும் ஏன் இந்த வேதனை...!!!
மனிதம் இல்லா மனித உலகில்
எனை ஏன் படைத்தாய்....
நீ பெரும் தவறிழைத்தாய்......
உனையின்றி ஒரு அனுவும்
அசையாது என்றிருக்க ....
பணமென்ற ஒன்று இந்த உலகையே
அசைத்துதான் பார்க்க
ஏன் படைக்க விதித்தாய் .....
நீ பெரும் தவறிழைத்தாய் ....
மனிதனை ஆன் ஜாதி பெண் ஜாதி என நீ படைக்க.....
மனித மிருகங்கள் அதை மேல் ஜாதி கீழ் ஜாதி என பிரிக்க ...
மனிதன் எனும் போர்வையில் மிருகங்களாய் வாழும் இவ்வகையானவர்களை ஏன் படைத்தாய் மாபெரும் தவறிழைத்தாய் ...
- அருண் குமார்