தங்கராசு காசிநாதன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தங்கராசு காசிநாதன் |
இடம் | : Lagos, Nigeria |
பிறந்த தேதி | : 27-Nov-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 556 |
புள்ளி | : 268 |
பிறந்தது வடலூரில்
வாழ்க்கையோ பல ஊரில்..
படித்ததோ பெட்ரோலியம்
பிடிப்பதோ கவிஓவியம்...
அப்படி ஒன்றும்
அழகில்லை அவளென்று
எத்தனை முறையோ
எதிர்கடந்து விட்டேன்
கீற்றுகளின் இடைவரும்
கதிரொளி போல
மேகத்திரளிடை ஒளிரும்
விண்ணொளி போல
இடைவெளிப் பேணி
உயிர்வலி தவிர்க்கவா?
முகக்கவசம் மேல்நின்று
அகங்குளிர செய்கிற
கயல்விழியில் கலந்தினி
கவிக்காதல் பொழியவோ?
தினம்தினம் இறக்கும்
தினங்களும் பூக்களுமாய்
மறப்பதாய் எண்ணியே
இறக்கிறேன் அனுதினமும்....
பிறப்பின் ரகசியமே இங்கே
பரம்பொருளின் திருஉருவாம்
விண்ணுயர கோபுரங்கள் -அதில்
கண்நிறைய காமசிற்பங்கள்...ஆம்
ஆடைகள் கடந்த ஆன்மத்தை நோக்கென
ஆண்டவன் சன்னதியில் ஆகம குறிகள்...!
சுடுகின்ற சூரியன் தொலையாத ரகசியம்
சுழல்கின்ற பூமியென சித்தம் தெளிந்தோர்
அலைந்தாடும் ஆணவ ஆண்சக்தி நிலைத்தாட
அழகோடும் அறிவோடும் சிவசக்தி செய்தார்
சக்திக்கு மட்டுமே தனிக்கோயில் சமைத்துநம்
புத்திக்கு சொன்னார் பெண்மையின் புனிதம்...!
போற்றற்குரிய பெண்மையிங்கே
போகப்பொருளாய் போனதென்ன?
காமவெறி கயவர்களால்
வன்புணர்வில் வீழ்ந்ததென்ன?
பொறுத்திருந்த பூமிப்பெண்- ஆழிப்
பேரலையாய் அழித்ததுகாண்...
ஆண்டவன் பத்தினிய
தனிமை என்னும் தாய்மாமன்
இயற்கையாய் என்காதலி ஆக்குகிறான்...
கண்ணில் சிந்தும்
கண்ணீற்கு தெரிவதில்லை
ஆறுதல் சொல்ல
யாருமில்லை என்று ...
துடித்திடும் இதயத்தால்
உணர முடிவதில்லை
அதன் துடிப்பு யாருக்கும்
தெரியாது என்று ....
ஏங்கிடும் மனதிற்கு
புரிவதில்லை
தன் ஏக்கத்திற்கு
விடை இல்லை என்று ...
கஷ்டம் என தெரிந்தும்
அன்போடு ஏற்கிறேன்
என்னை நேசித்திடும்
தனிமையை.....
தனியறையில் நீயிருக்க
தழுவிட நானிருக்க
சூடேறிய காற்றது
சுடரினை அணைத்திட
ஈருயிர் ஒன்றனைய
இருண்டதோர் உலகத்தில்
இடைவிடா யுத்தம்
இதழ்களில் மொத்தம்...!
சுட்டெரிக்கும் உச்சிப்பொழுது
சுந்தரி உன்ன பாத்தபோது
கண்ணு ரெண்டும் குளிருதடி-உன்
கவர்ச்சி என்ன இழுக்குடி
முதல்முறை பார்த்தேனடி
மூச்சை விடக்கூட மறந்தேனடி-உன்
அழகைப் பார்த்து உறைந்தேனடி
அசையா சிலையா ஆனேனடி
தாவனி உடுத்திய தாமரையே-என்னை
தவிக்கவிட்டு போகுறியே
ஏண்டி நீ,இப்படி பாக்குறியே
என்உசுர எடுத்திட்டு போகுறியே
சிரிச்சு சிரிச்சு நீ போற
சின்னாபின்னமா நான் ஆனேன்
திரும்பி திரும்பி நீ பாக்க
திசைய மறந்து நான் போறேன்
ஏதேதோ ஆகிப் போச்சு
எப்போதும் கேட்குது உன்பேச்சு
எல்லாம் இப்ப மாறிப் போச்சு
என்னுள் காதல் வந்தாச்சு...💘
உள்ளத்தை கல்லாக செய்தாயோ?ஆளானதும்
தெள்ளமுதாய் அளந்தே பேசினாய் அரிதாய்
கற்சிலை கொண்டே கடவுளை படைத்தது
அற்புத உருவே உம்மனதின் உதாரணமா?
நீர்த்தடுத்து காக்கும் கல்லணை உருவானது
நீர்தடுத்து தேக்குமுன் அன்பின் தாக்கமோ?-நீ
என்முன் சொல்லாத அன்பின் ஆழம்
ஊரார் சொல்கையில் தீராமல் நீளும்...!
நூறுமுறை நின்றது கடிகாரமும் ஓய்வுக்காய்
ஒருமுறை தேங்காது ஓடியோடி உழைத்தாய்
திருமுறை பாடிடும் நடராசன் போலவே-நின்
திருவடி நாடிய ஓய்வினை துறந்தாய்...
வெட்டும் பனையேறி உயிராட பிழைத்தும்
வாட்டம் திணையின்றி அன்போடு அழைத்து
பொட்டலம் பிரித்து நீட்டியநின் கைரேகை
தீட்டிய காவியமோ இனியதென் வாழ்க்கை...!
பெ