முகக்கவசம் மேல்நின்று
அப்படி ஒன்றும்
அழகில்லை அவளென்று
எத்தனை முறையோ
எதிர்கடந்து விட்டேன்
கீற்றுகளின் இடைவரும்
கதிரொளி போல
மேகத்திரளிடை ஒளிரும்
விண்ணொளி போல
இடைவெளிப் பேணி
உயிர்வலி தவிர்க்கவா?
முகக்கவசம் மேல்நின்று
அகங்குளிர செய்கிற
கயல்விழியில் கலந்தினி
கவிக்காதல் பொழியவோ?