சரக்கொன்றைப் புளி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வன்பனில மேக மலக்கட் டொடுகுடரின்
துன்ப மலின(ம்)வெப்பு தோன்றுங்கால் - இன்பந்
தருதமா லப்பரிம ளத்தனத்தா யிந்தக்
கிருதமா லப்புளியைக் கேள்
- பதார்த்த குண சிந்தாமணி
சரக்கொன்றைப்புளி வாதப்பிரமேகம், மலக்கட்டு, குடல்வலி, குடல் அழுக்கு, உட்டிணம் இவற்றைப் போக்கும்