குருவியின் கூடு

குருவியின் கூடு; ​
குடி கொண்டிருக்கும் வீடு;
குதூகலம் நிறைந்த வீடு;
குருவியும் தன் குடில் கட்டும் அழகைப்பாரு;
பின்னியே கட்டிய வீடு;
பிள்ளைகளைக் காக்க சுல்லிகளையும்,
காய்ந்த இலை தளை, நாறுகளையும் பொறுக்கி சுமந்து வந்து,
கட்டிய குட்டி வீடு இது;
காசு இல்லாமல் கடை சரக்கு இல்லாமல்
கண்ணுக்கு அழகாய் கட்டிய வீடு இது;

குருவியின் கூடு,
குறையில்லாமல் இன்பம் ஓடுது பாரு;
கொஞ்சும் அழகைப்பாரு;
குழைந்து வடியும் பாசத்தைப்பாரு;
ஆங்கு கொட்டிக் கிடக்கும் கொண்டாட்டத்தைப் பாரு;
கீச் கீச் என்று கத்தித் தவிக்கும் குஞ்சுகளை
பாதுகாப்பாய் சிறகுக்கீழ் பாதுகாக்கும் தாயின் பாசத்தை பாரு;
அலகால் குழந்தைகளை கோதிவிடும் அழகினையும்;
தத்தி தத்தி ஓடும் குஞ்சை கொத்தியே அதட்டும் பாங்கினையும்;
கொத்திவந்த உணவை கக்கியே ஊட்டும் பாசத்தையும் பாரு;
சுத்தி சுத்தி வட்டம் இட்டு சூறையாடத்துடிக்கும்
கழுகுகள் காக்கையிடமிருந்து பாதுகாவலனாய் இருந்து
பாதுகாக்கும் சாமர்த்தியம் சாதூர்யத்தைப் பாரு;
சிறு குடும்பம் தான்,
சிக்கனமான குடும்பம் தான்;
சினம் சீற்றம் வராத குடும்பம் தான்;
வக்கனை பேசாத குடும்பம் தான்;
வாயாடாத குடும்பம் தான்;
வாழ்வியலை கற்றுத்தரும் குடும்பம் தான்;
அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள்தான்;
சிறகுகள் முளைக்கும் வரை சிறு வீட்டிற்குள் கூடும் உறவுகள் தான்;
சிறு சிறு தவறுக்கும் தாயிடம் கொத்து உண்டு தான்;
குறையில்லா பாசம் குழைந்தே வடியிது;
கூண்டுப் பறவைகள் இல்லை கூடிவாழும் பறவைகள்;
பறவைகளின் பாசறைதான் இந்த குருவிக் கூடு;
வழியும் பாசம் இங்கே வாழ்க்கைப் பாடம் எடுக்குது;
அன்பான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடுது;
அழகான குடும்பம் தான் அதிசயப் படைப்புக்கள் தான்;
ஆர்ப்பாட்டம் இல்லாத அடக்கமான குடும்பம் தான்;
கொட்டும் மழையோ; கட்டும் குளிரோ;
காற்றோ; தன் குஞ்சிகளை சிறகால் அணைத்து கதகதப்பை மூட்டும் தாய் பறவையைப்பாரு;
சிறிய வீடுதான்; சிந்தனைக் கூடுதான்; சிறைபோனது பாசப்பறவைகள் தான்;
சிதறிய தானியங்களை சிறிய அலகால் கொத்திவந்தே
தன் வீட்டில் சேமிக்கும் பாங்கும் அழகுதான்;
குறையில்லாவீடு குஞ்சிகுளின் சப்தத்துடன்
குதூகலமாய் வாழும் குருவியினங்கள் தான்;

பெருமழையோ பேரிடரோ;
போராட்டம் தான்;
பேராசை இல்லாத பறவைகள் கூட்டம் தான்;
பெரும் ஆபத்து வந்தாலும்
சமாலிக்கும் இந்த பறவைகள் தான்;
பணம் காசு பகை பிடிவாதம் இல்லாத
பன்பான அன்பு வாழ்க்கைதான்;
பள்ளிக் கூடம் போகாது பன்பைக் கற்றுக்கொண்ட அன்பு கூட்டம் தான்;
சாதிச் சண்டை மதச் சண்டை இல்லையாம்;
கூடிப்பறந்து ஓடித் திரியும் பறவைகள் தான்;
உதயம் எழுந்த உடன், உடனே எழுந்து ஓடி, தன் உணவை தானே தேடி எடத்து வரும் உழைப்புத்தான்;
தனிமை என்ற பேச்சே அங்க இல்லையாம்
குருவிக் கூடு தான்
கொடிகள் கோசம் கொடுமைகள் கொலை கொல்லைகள் இல்லையாம்;
உடமைகள் என்பது உள்ளம் தான்
உரட்டல் மிரட்டல் இல்லையாம்;
குருவிக் கூடு தான் கொண்டாடப்பட வேண்டிய வீடுதான்;
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (3-Jul-22, 6:23 pm)
Tanglish : kuruviyin koodu
பார்வை : 130

மேலே