முதல் பார்வையிலே💘
சுட்டெரிக்கும் உச்சிப்பொழுது
சுந்தரி உன்ன பாத்தபோது
கண்ணு ரெண்டும் குளிருதடி-உன்
கவர்ச்சி என்ன இழுக்குடி
முதல்முறை பார்த்தேனடி
மூச்சை விடக்கூட மறந்தேனடி-உன்
அழகைப் பார்த்து உறைந்தேனடி
அசையா சிலையா ஆனேனடி
தாவனி உடுத்திய தாமரையே-என்னை
தவிக்கவிட்டு போகுறியே
ஏண்டி நீ,இப்படி பாக்குறியே
என்உசுர எடுத்திட்டு போகுறியே
சிரிச்சு சிரிச்சு நீ போற
சின்னாபின்னமா நான் ஆனேன்
திரும்பி திரும்பி நீ பாக்க
திசைய மறந்து நான் போறேன்
ஏதேதோ ஆகிப் போச்சு
எப்போதும் கேட்குது உன்பேச்சு
எல்லாம் இப்ப மாறிப் போச்சு
என்னுள் காதல் வந்தாச்சு...💘