தேவிராஜ்கமல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தேவிராஜ்கமல் |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 03-Jul-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 1606 |
புள்ளி | : 270 |
வாழ்கை வாழ்வதற்கே..வாழ்வது வாழவைப்பதற்கே..!!!
இதயத்தின்
அருகினில்
இடைவிடாது
துடிக்கும்
இன்னொரு
இதயம்!
என் மனம்
செயலிழக்கும்
போதெல்லாம்...
அதனை
புதுப்பித்துக்கொள்ள
உதவும்
மந்திரச் சாவி...
உந்தன் மாயக் கண்கள்!
இயக்கம்
இல்லையென்றால்
இறந்தேன்
என்றாகிவிடுமா?
புரிந்துகொள் ஆருயிரே
நீ என்னருகில்
இல்லையென்று!
என்னை நேசிக்க...
என்னைப் புரிந்துகொள்ள...
எனக்காக துடிக்க...
ஓர் உயிர் போதும்...
அது நீயாக வேண்டும்...!
பலமுறை காதலில்
விழுந்திருக்கிறேன்...
அது...
ஒவ்வொரு முறையும்
உன்னுடன் மட்டுமே...!
நரைத் தோன்றி
திரை விழுந்து
மூப்பில் கரைந்து
முதுமகன் ஒருவன்
அருகன் வேண்டி
விழிநீர் வழிய
தனிமை உண்டு
காற்றுக் குடிக்கும்
தாவரமென
பருக்கைகள்
உண்டீரோயென
வினவ நாதியற்று
ஈர நெஞ்சம் அதனை
கனக்கச் செய்தல்
நியாயமாகுமோ
மூப்பெய்தும் தானே
உமக்கும்
அறிய மாட்டீரோ
இளமை யவருக்கும்
நிரந்தரமில்லை
உணர்ந்துக் கொண்டு
முதுமையைப் போற்றிட
வாரீரோ மானுடரே!
இவன்
புறத்தில் அழுக்கன் ...
அகத்தில் அளப்பறியா அழகன்...
இவன்
நோய் தொற்று என்று
தன் பணிக்கு விரதமிருந்ததில்லை ..
இவன்
நாற்றத்தையே சுவாசமாய் ஏற்பவன் ...
குப்பைகளே கூடாரமாய் .கொண்டவன்...
எச்சத்தையே சுற்றி வாழ்பவன்...
மிச்சத்தை உண்டு மறைபவன்...
இவன்
நம் எச்சத்தின் மிச்சத்தை
நம் இச்சையின் பிச்சையை
மனமுவந்து மருந்து தெளித்து
நறுமணம் நல்க செய்பவன்..!
மூக்கை மூடி கடக்குறோம் நாங்க
முங்கி அதுலே கிடக்குற நீங்க...
துப்புக் கெட்டு துப்புறது நாங்க
கைய விட்டு கிட்டு அள்ளுறது நீங்க...
கழிவறைனு சொல்லவே கூச்சம்...
சாக்கடை சொல்ல சங்கோஜம்...
நம் மலத்தை நாமே வெறு
உன்னில் என்னை
தொலைத்தத் தருணம்...
என்றுமே
மீளக்கூடாதத் தருணமாய்!
காண்கையில்
கவிழ்ந்த இமைகள்
திறந்தன மனதை.
நீண்ட யூகங்களின்
மகரந்தம் சுழன்றன
மௌனத்தில் மோதி.
பிறவிமுள் களைய
காந்தர்வ ஸ்நேகிதம்
ஒற்றிக்கொண்ட கண்களில்
ஸ்வாசித்தன அன்பினை.
வெட்கத்தின் கனவை
மொழிபெயர்த்த காதல்
மெல்லச்சிரித்தது
உன் கொலுசொலிகளில்.
ஒரு தருணத்தில்
சூடியிருந்த உன்
ஒளி கலவிய பூக்கள்
சாலையில் நழுவின
பயிர்ப்பின் உச்சத்தில்.
புன்னகையின் ஈரம்
நரம்புகளில் அதிர்ந்தது
காதலின் நறுமணமாய்.
பார்வைக்கப்பால் சென்றாலும்
வந்தவண்ணமாய் வருகிறாய்
தூரலில் திரண்டு
பூவில் கவிந்த பனியென.
புரிந்துகொள்ளுதல்
மட்டும்
வாழ்க்கையாகி விட்டால்..
வாழ்வதைக்காடிலும்
இன்பம்
வேறேதும் இல்லை...!
உள்ளத்தை கல்லாக செய்தாயோ?ஆளானதும்
தெள்ளமுதாய் அளந்தே பேசினாய் அரிதாய்
கற்சிலை கொண்டே கடவுளை படைத்தது
அற்புத உருவே உம்மனதின் உதாரணமா?
நீர்த்தடுத்து காக்கும் கல்லணை உருவானது
நீர்தடுத்து தேக்குமுன் அன்பின் தாக்கமோ?-நீ
என்முன் சொல்லாத அன்பின் ஆழம்
ஊரார் சொல்கையில் தீராமல் நீளும்...!
நூறுமுறை நின்றது கடிகாரமும் ஓய்வுக்காய்
ஒருமுறை தேங்காது ஓடியோடி உழைத்தாய்
திருமுறை பாடிடும் நடராசன் போலவே-நின்
திருவடி நாடிய ஓய்வினை துறந்தாய்...
வெட்டும் பனையேறி உயிராட பிழைத்தும்
வாட்டம் திணையின்றி அன்போடு அழைத்து
பொட்டலம் பிரித்து நீட்டியநின் கைரேகை
தீட்டிய காவியமோ இனியதென் வாழ்க்கை...!
பெ