முதுமையைப் போற்றுவோம்
நரைத் தோன்றி
திரை விழுந்து
மூப்பில் கரைந்து
முதுமகன் ஒருவன்
அருகன் வேண்டி
விழிநீர் வழிய
தனிமை உண்டு
காற்றுக் குடிக்கும்
தாவரமென
பருக்கைகள்
உண்டீரோயென
வினவ நாதியற்று
ஈர நெஞ்சம் அதனை
கனக்கச் செய்தல்
நியாயமாகுமோ
மூப்பெய்தும் தானே
உமக்கும்
அறிய மாட்டீரோ
இளமை யவருக்கும்
நிரந்தரமில்லை
உணர்ந்துக் கொண்டு
முதுமையைப் போற்றிட
வாரீரோ மானுடரே!