மாலினி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மாலினி |
இடம் | : |
பிறந்த தேதி | : 10-Sep-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 395 |
புள்ளி | : 132 |
கவிதை கற்க எழுத ஆசை
இந்தியாவின் இடஒதுக்கீடு உண்மையில் யாரை போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு கிட்டி விட்டதா? தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் என அண்ணல் அம்பேத்கார் சொன்னதாக கேள்விப்பட்டேன் . அது உண்மையா? அது உண்மை எனில் ஏன் மற்ற இனத்தினர் உள்ளே வந்தனர்? பொருளாதார நசிவில் வந்தால் முன்னேறிய வகுப்பில் ஏழைகளே இல்லையா ? அவர்களை ஏன் புறக்கணிப்பு செய்யவேண்டும்?
பொன்னிறக் கையால் கதிரோன் தழுவ
பொழிலில் மலர்ந்து சிரித்தது தாமரை
தென்றலும் வந்துநல் வாழ்த்துப்பா பாடிட
நாணிச் சிவந்தது பூ
நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....
நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....
மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் மூன்று மடமையான சித்தாந்தம் என்னென்ன? நறுக் சுருக் பதில் மட்டும்.
மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் மூன்று மடமையான சித்தாந்தம் என்னென்ன? நறுக் சுருக் பதில் மட்டும்.
சாதி, மத அமைப்புகள் மற்றும் சாதி, மதத்தைப் பயன்படுத்தி அரசியல் நடத்தும் கட்சிகளால் நாட்டுக்கு நன்மையா? ஆபத்தா?
உனக்கு சினம் மூளுமோ?
சினம் எரிக்குமோ
அச்சத்தின் பாடுகளை.
எரித்த அச்சத்தின்
சுவடுகளில் நகருமோ மனம்.
எரிமலைகள் கோபமானவை.
நதிகளின் சலனமும்
கோபமான வியர்வைதான்.
பூக்களின் கோபங்கள்
மரமாகி நிமிருமேனில்
உன் சினமும்
உரமாகும் உனக்கே கூட
அறவழி சினமென்றால்.
அள்ளி முடிந்து நீ
கூச்சலிட்டால் அது
பள்ளிகுழந்தையின் அழுகைதான்.
ஜான்சி ராணி உண்டு...
எல்லோரும் ஜான்சிராணி அல்ல.
அலைகளை மிதிக்கும் காற்று.
மலரில் அவிழ்ந்த மனம்.
பகல் எனும் வெண்சாத்தான்.
திறவாத குளிர்பதனியாய்
நள்ளிருள் நாவின் உமிழ்நீர்.
மழையின் அழுகையில்
வெறித்துப்போன ஸ்வரங்கள்.
நிழல் கண்டு வெறுத்து
அஞ்சியோடும் நாயை
புணரத்துரத்தும் நாய்.
நெளியாத கதவில் தொங்கும்
நசுங்கி நசுங்கி அழும் கொலுசு.
வேட்டைக்காரனின்
நரை தாடியில் ரீங்ங்ங்கும் ஈ.
ஊமைப்பேருந்து கொத்தி
சப்பையான கர்ப்பிணிகள்.
நரகங்களை பிடித்துண்ணும்
ஆவியின் உள்காய்ச்சல்.
எல்லாம் எழுதியாயிற்று.
உயிரே...
உன் மௌனத்தில்
சாம்பலாகும் புதர்களில்
விண்டு போன அக்காதலோ
தாய் கண்டு சிதறிய புள்ளாய்.
சொல்...எப்படி எழுத?
எறும்பு கடித்தால்
கடிக்கட்டும்
சில கனவின்போது...
யானை முட்டினால்
முட்டட்டும்
சிலர் பேசும்போது...
பூனை பிராண்டினால்
பிராண்டட்டும்
சில கவிதை படிக்கும்போது...
நீங்க எப்போவாச்சும் ஏண்டா(டி இந்த நாட்டுல) பிறந்தோம்னு ஃபீல் பண்ணி கவலைப்பட்டு இருக்கீங்களா?
சங்க தமிழ் இலக்கியத்தில் அறிவியல் பற்றிய புனைவுகள் நிறைய உள்ளதாக சொல்றாங்கோ...அது ஏன் அன்றே தமிழனால் உரு கொடுக்க முடியாமல் போச்சு...நுணுக்கமான தகவல் கிடைக்குமா?