தோழியின் சினம்

உனக்கு சினம் மூளுமோ?
சினம் எரிக்குமோ
அச்சத்தின் பாடுகளை.
எரித்த அச்சத்தின்
சுவடுகளில் நகருமோ மனம்.
எரிமலைகள் கோபமானவை.
நதிகளின் சலனமும்
கோபமான வியர்வைதான்.
பூக்களின் கோபங்கள்
மரமாகி நிமிருமேனில்
உன் சினமும்
உரமாகும் உனக்கே கூட
அறவழி சினமென்றால்.
அள்ளி முடிந்து நீ
கூச்சலிட்டால் அது
பள்ளிகுழந்தையின் அழுகைதான்.
ஜான்சி ராணி உண்டு...
எல்லோரும் ஜான்சிராணி அல்ல.

எழுதியவர் : ஸ்பரிசன் (24-Aug-18, 4:27 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : THOZHIYIN sinam
பார்வை : 186

மேலே