என்னை உணர்த்தும் உன் சிறகில்

அலைகளை மிதிக்கும் காற்று.
மலரில் அவிழ்ந்த மனம்.
பகல் எனும் வெண்சாத்தான்.
திறவாத குளிர்பதனியாய்
நள்ளிருள் நாவின் உமிழ்நீர்.
மழையின் அழுகையில்
வெறித்துப்போன ஸ்வரங்கள்.
நிழல் கண்டு வெறுத்து
அஞ்சியோடும் நாயை
புணரத்துரத்தும் நாய்.
நெளியாத கதவில் தொங்கும்
நசுங்கி நசுங்கி அழும் கொலுசு.
வேட்டைக்காரனின்
நரை தாடியில் ரீங்ங்ங்கும் ஈ.
ஊமைப்பேருந்து கொத்தி
சப்பையான கர்ப்பிணிகள்.
நரகங்களை பிடித்துண்ணும்
ஆவியின் உள்காய்ச்சல்.
எல்லாம் எழுதியாயிற்று.
உயிரே...
உன் மௌனத்தில்
சாம்பலாகும் புதர்களில்
விண்டு போன அக்காதலோ
தாய் கண்டு சிதறிய புள்ளாய்.
சொல்...எப்படி எழுத?

எழுதியவர் : ஸ்பரிசன் (24-Aug-18, 7:46 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 66

மேலே