ஆ க முருகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆ க முருகன் |
இடம் | : சவூதி அரேபியா |
பிறந்த தேதி | : 10-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 486 |
புள்ளி | : 162 |
தமிழன்
வந்தாரை
வாழவைத்தான்..
சொந்தமற்றோர்க்கெல்லாம்
சோறூட்டினான்...
புயல்வீசியபோது
நெல் தூற்றினான்...
கடப்பாரையை விழுங்கிவிட்டு
கசாயம் குடித்து
பார்த்தான் ...
பொல்லாதவரையும்
நல்லோராய்
போற்றினான்...
திரைப்பட வாழ்வில்
தினம் தினம்
திளைத்தான்...
அந்நியரை
அரியணையேற்றினான்...
சண்டையில்
கை மறந்தான்...
சபையில்
வாய் மறந்தான் ...
தன் வீரத்தை
தானே..
விவேகத்தால் கொன்றான்..
திரைகடலோடியும்
திரவியம் தேடினான்...
சொந்தநாட்டில்
அஞ்சி அஞ்சி
பஞ்சம் பிழைத்தான்..
விதி விலக்கான - சில
வீரனெல்லாம்
சதியில் மாட்டி
சமாதி ஆனார்கள்....
தமிழன்
த
சேலம் - சென்னை எட்டு வழி சாலை தேவையா?
சேலம் - சென்னை எட்டு வழி சாலை தேவையா?
தூத்துக்குடி போராட்டத்தில் .....
சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் துப்பாக்கிசூடு க்கு உத்தர விட்டோம் என்று அதிமுக வும் ,பி ஜெ .பி வும் சொல்லும் சாக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா ???
போராடினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் , சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் ..கூறும் கருத்து எத்தகையது ??----உங்கள் பார்வைகளை பதிவு செய்யுங்கள் .
இந்தியாவின் இடஒதுக்கீடு உண்மையில் யாரை போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு கிட்டி விட்டதா? தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் என அண்ணல் அம்பேத்கார் சொன்னதாக கேள்விப்பட்டேன் . அது உண்மையா? அது உண்மை எனில் ஏன் மற்ற இனத்தினர் உள்ளே வந்தனர்? பொருளாதார நசிவில் வந்தால் முன்னேறிய வகுப்பில் ஏழைகளே இல்லையா ? அவர்களை ஏன் புறக்கணிப்பு செய்யவேண்டும்?
தற்போதைய சூழலில் நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையா ?
தமிழன்
வந்தாரை
வாழவைத்தான்..
சொந்தமற்றோர்க்கெல்லாம்
சோறூட்டினான்...
புயல்வீசியபோது
நெல் தூற்றினான்...
கடப்பாரையை விழுங்கிவிட்டு
கசாயம் குடித்து
பார்த்தான் ...
பொல்லாதவரையும்
நல்லோராய்
போற்றினான்...
திரைப்பட வாழ்வில்
தினம் தினம்
திளைத்தான்...
அந்நியரை
அரியணையேற்றினான்...
சண்டையில்
கை மறந்தான்...
சபையில்
வாய் மறந்தான் ...
தன் வீரத்தை
தானே..
விவேகத்தால் கொன்றான்..
திரைகடலோடியும்
திரவியம் தேடினான்...
சொந்தநாட்டில்
அஞ்சி அஞ்சி
பஞ்சம் பிழைத்தான்..
விதி விலக்கான - சில
வீரனெல்லாம்
சதியில் மாட்டி
சமாதி ஆனார்கள்....
தமிழன்
த
தமிழனின் வீர, பண்பாட்டு நிகழ்வான ஏறுதழுவுதலை தடை செய்து, தமிழனை மல்லுக்கட்ட வைத்த காரண மற்றும் காரணிகள் என்ன?
நம் விதி...
இந்தியனாய்,
பெருமிதம்கொண்டு....
ஒலிம்பிக்கில்
பதக்கங்களை எண்ணவேண்டிய
நாம்- மாறாக,
பதக்கங்களை தேடிக்கொண்டு
இருக்கிறோம்
ஒலிம்பிக் போட்டியில்...
கவிஞர் திரு: நா. முத்துக்குமார்
கவிஞர் திரு: நா. முத்துக்குமார் அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் பேரிழப்பு. இவரின் ஆன்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்த போட்டி நிறைந்த சமூகத்தில், இவரை இழந்து தவிக்கும் 37 வயது மனைவி, 10 வயது மகன், 8 மாத குழந்தை இவர்களுக்கு மாறாக என்ன கிடைப்பினும் அது ஒரு தந்தைக்கு ஈடாக போவதில்லை. இருப்பினும் கடவுள் நல்ல தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இந்த குடும்பத்திற்கு கொடுத்து அவர்கள் தன்னிச்சையாக வாழ அருள் புரிய வேண்டுவோம்!
தொடக்கத்தில் 2003-4 ல் கல்கியில் வெளிவந்த கிராமம், நகரம், மாநகரம் எனும் கவிதை கலந்த கட்டுரை தொகுப்பு இவருக்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி தந்தது. படிப்பவரை அப்படியே கிராமத்துக்கும், நகரத்துக்கும், மாநகரத்துக்கும் கூட்டிச்சென்றது இந்த கட்டுரை. இதனை திரும்ப திரும்ப பல முறை நான் படித்திருக்கிறேன், போதாதென்று ஒவ்வொரு முறை வெளிவந்த கட்டுரையையும் கிழித்து தொகுப்பாக்கி என் ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இதையும் டோக்கியோவிலிருந்து என் ஊருக்கு கொண்டுவந்தேன். இதற்கு பிந்தைய நிகழ்வுகள் திரைப்பட பாடலாசிரியராய் அனைவரும் அறிந்ததே !! இவரின் இறப்பு ஒரு புதிராய் என்ன நடந்ததென்று தெரியாமல்.........காலத்தோடு கவனித்திருந்தால் மரணம் தவிர்த்திருக்கவேண்டிய நிகழ்வு ஆகிருக்குமோ...? இவர் என் கிராமத்துக்கு பக்கத்து நகரம் என்றாலும்......., இவரின் எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடுதான் இங்கே நான் பதியும் எண்ணம்.....
ஆதங்கத்துடன்,
என்றும் ஒரு சக-கவிஞனாய்...............
ஆ. க. முருகன்,
சவூதி அரேபியா.
இயற்கைக்கு
நாம்
கொடுத்தோம்
இடைஞ்சல்கள் ....
இங்கே
இயற்கை
இடையறாது....
இன்னும்
கொடுக்கிறது
நமக்கு
இன்னல்கள்....
இனியாவது
இயற்கையை
இயல்பாய்
இருக்க விடுவோம்....!
முருகா,
உனக்கு
எதுவும் வேண்டாமென்று
ஆண்டியானாய் பழனியில்...
ஆனால்.....
உன் உண்டியலில்
வசூலானது
ஒரு கோடி - பணம் !
உனக்கும்
நிம்மதி இல்லையோ???