எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிஞர் திரு: நா. முத்துக்குமார் கவிஞர் திரு: நா....

கவிஞர் திரு: நா. முத்துக்குமார்


கவிஞர் திரு: நா. முத்துக்குமார் அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் பேரிழப்பு. இவரின்  ஆன்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்த போட்டி நிறைந்த சமூகத்தில், இவரை இழந்து தவிக்கும் 37 வயது மனைவி, 10 வயது மகன், 8 மாத குழந்தை இவர்களுக்கு மாறாக என்ன கிடைப்பினும் அது ஒரு தந்தைக்கு ஈடாக போவதில்லை. இருப்பினும் கடவுள்   நல்ல தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இந்த குடும்பத்திற்கு கொடுத்து  அவர்கள் தன்னிச்சையாக வாழ அருள் புரிய வேண்டுவோம்!

தொடக்கத்தில் 2003-4 ல் கல்கியில் வெளிவந்த கிராமம், நகரம், மாநகரம் எனும் கவிதை கலந்த கட்டுரை தொகுப்பு இவருக்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி தந்தது. படிப்பவரை அப்படியே கிராமத்துக்கும், நகரத்துக்கும், மாநகரத்துக்கும்  கூட்டிச்சென்றது இந்த கட்டுரை. இதனை திரும்ப திரும்ப பல முறை நான் படித்திருக்கிறேன், போதாதென்று ஒவ்வொரு முறை வெளிவந்த கட்டுரையையும் கிழித்து தொகுப்பாக்கி என் ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இதையும் டோக்கியோவிலிருந்து என் ஊருக்கு கொண்டுவந்தேன். இதற்கு பிந்தைய நிகழ்வுகள் திரைப்பட பாடலாசிரியராய் அனைவரும் அறிந்ததே !! இவரின் இறப்பு ஒரு புதிராய் என்ன நடந்ததென்று தெரியாமல்.........காலத்தோடு கவனித்திருந்தால் மரணம் தவிர்த்திருக்கவேண்டிய நிகழ்வு ஆகிருக்குமோ...?  இவர் என் கிராமத்துக்கு பக்கத்து  நகரம் என்றாலும்......., இவரின் எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடுதான் இங்கே நான் பதியும் எண்ணம்.....

ஆதங்கத்துடன்,
என்றும் ஒரு சக-கவிஞனாய்...............

ஆ. க. முருகன்,
சவூதி அரேபியா.

பதிவு : ஆ க முருகன்
நாள் : 16-Aug-16, 3:17 am

மேலே