ஆ க முருகன்- கருத்துகள்

தங்களுக்கு மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி !

என்றும் அன்புடன்
ஆ. க. முருகன்

Thank you so much for your great appreciation and wishes. I will surely develop myself to meet your expectations.
Appreciable words from great people like you are ever remembered and so nice, thanks.....
Anbudan,
A.K. Murugan
(Very sorry my Tamil font temporarily doesn't work)

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.....

அன்புடன்,
ஆ. க. முருகன்.

இந்த திட்டத்தின் வரைவு படத்தை NHAI யில் பார்த்துட்டே தெளிவாக விவாதித்தால் நன்றாக இருக்கும். இந்த சாலை ஏற்கனவே உள்ள சாலையை விரிவு படுத்தும் திட்டமல்ல. புதிய எட்டு வழி சாலை சென்னையிலிருந்து நேராக சேலம் செல்ல காடு மலை எதுவாக இருப்பினும் அழித்து அதன் வழியே செல்வது. இது பெரும்பாலான காடுகளையே அழிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்பேடு காடு, அல்லியாளமங்கலம் காடு, செங்கம் காடு, கிழக்கு தொடர்ச்சி மலையை குடைவது, பின் சேலம் சென்றடைவது. சேலம் செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடம் உள்ளபோது நான்காவது எதற்கு? எட்டு வழி சாலை அமைய உள்ள வழித்தடத்தில் ஏற்கனவே சாலை உள்ளபோது தனியாக என்? வழி ஒன்று: சென்னை -செங்கல்பட்டு -திண்டிவனம் -கள்ளக்குறிச்சி -சேலம், இரண்டு : சென்னை - வேலூர் -தருமபுரி- சேலம், மூன்று: சென்னை-மாமண்டூர்-உத்திரமேரூர்-வந்தவாசி -திருவண்ணாமலை -செங்கம் -அரூர் -சேலம். இந்த மூன்றாவது வழித்தடம் பக்கத்தில்தான் நேராக எட்டு வழி சாலை அமைய உள்ளது. இந்த மூன்றாவது வழித்தடத்தை விரிப்படுத்தினாலே போதும் அதே நேரத்தில் சேலம் செல்லலாம், இதுதான் மிக குறைந்த தொலைவு. அப்படி இருக்க ஏன் பத்தாயிரம் கோடி செலவில் தனியாக சாலை? சேலத்திலிருந்து கொண்டு வர என்ன இருக்கிறது? இந்த சாலை எடப்பாடிக்கா இல்லை சேலம் மக்களுக்கா? நான்காயிரத்து ஏழு நூறு ஏக்கர் விளை நிலங்களை அழிப்பதால் ஏக்கருக்கு எழுபது மூட்டை என்று கணக்கிட்டால் கூட மூன்று லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் மூட்டை நெல் ஒரு போகத்திற்கு இழக்கிறோம். வருடத்துக்கு மூன்று பாகம் எனில் வருடத்துக்கு பனிரெண்டு லட்சம் மூட்டை நெல் இழப்பு. காட்டு வளம் அழிப்பு. நூறுக்கணக்கான உயிரினங்கள் அழியும் அபாயம் . சமமற்ற உயிர் மண்டலம் உருவாகும். கிழக்கு தொடர்ச்சி மலையை குடைந்தால் வடகிழக்கு பருவ மழை பொழியாது. சென்னை, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதே திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் தான். இனி எடப்பாடி உட்பட பிளாஸ்டி அரிசி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யவேண்டியதுதான். சேலத்திலிருந்து வேகமாக சவ்வரிசி, மரவள்ளி கிழங்கு பசுமை வழி சாலை வழியாக கொண்டு வரலாம் சென்னை மக்களுக்காக . இந்த மாவட்டங்களுக்கு அடிப்படை தேவை நல்ல மருத்துவ மனை, நல்ல பள்ளிக்கூடம், கல்லூரிகள். இந்த மாவட்டங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களை நம்பியே உயிர் வாழ்பவர்கள், வேறு தொழில் தெரியாது இவர்கள் இழப்பீடு வாங்கிக்கொண்டு நேராக டாஸ்மாக் செல்ல வேண்டியதுதான். இந்த டெண்டர் எப்படியும் சேகர் ரெட்டிக்கு தான் கிடைக்கும் கமிஷன் நாற்பது சதவீதம் பேசி முடிக்கப்பட்டது... இவ்வளவு அக்கறை காட்டும் எடப்பாடி அரசு ஏன் எய்ம்ஸ் மருத்துவ மனையை இழுத்தடிக்கிறது ? வாழ தகுதியில்லாத நகரமாக சென்னை பிதுங்கி வழிகிறது. சென்னைக்கு நிகராக ஏன் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் போன்ற நகரங்களை வளர வைக்கக்கூடாது? வரும் டிசம்பரில் வெள்ளம் வந்தால் சென்னை நிலைமை தெரியும் மேலும் இயற்கை எவ்வளவு வலுவானது என்று புரியும் . இவர்கள் வளர்ந்த நாடுகளை பார்த்தால் தெரியும் எல்லா நகரங்களும் கட்டமைப்பு மற்றும் கல்வி, மருத்துவ வசதியில் ஒரே மாதிரிதான் இருக்கும்..என்ன செய்வது தமிழனின் நெலமை யாருக்கோ போட்ட ஒட்டு இங்கு எடப்பாடி தட்டில் விழுந்தது அதிஷ்டம்......

(நன்றி: வாசகர், நலன்விரும்பி, தினமலர்)

வரலாற்றில் எல்லாம் மாறும் என்பது உண்மையே ஆனால் இன்னும் இரட்டை இலையை, சூரியனை பார்த்தவுடன் ஒட்டு போடுபவர் உள்ளவரை இந்த மாற்றம்-மாற்றத்துக்கு உட்படாது. சூழ்நிலை கைதியாய் மக்கள், அவர்கள் சூழ்நிலையை கைது செய்யும் வரை காத்திருப்போம்...

தங்களின் பதிலுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. நான் எந்த அரசியல் தலைவருக்கும் எதிரானவன் அல்ல. சுயநலம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பைத்தான் நான் விமர்சித்தேன். ஏற்கனவே பொது நலம் என்ற போர்வையில் புகுந்த திராவிட கட்சிகள் செய்தது ஊழலை தவிர வேறொன்றுமில்லை. இந்த ஊழலில்/லஞ்சத்தில் பாதிக்கப்பட்டதால்தான் நான் உள் நாட்டில் வேலை செய்யாமல் போனமைக்கு காரணம். உள் நாட்டு மக்களுக்கு சேவை செய்யமுடியாமல் போனதற்கு நான் பலமுறை வருந்தியிருக்கிறேன். லஞ்சமில்லாமல் வேலை கொடுத்தால் இன்றே அந்த வேலையில் சேர தயாராய் இருக்கிறேன். நான் செய்யும் வேலையை தனி மனிதனால் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் கடினம். நீங்கள் கார்ப்பரேட் ஆதரவு தொழில் செய்பவர் என்பதால் வேண்டுமானால் உங்கள் பார்வை வேறு மாதிரியானதாக இருக்கலாம். ஆனால் இதுமாதிரியான பார்வைகள் ஒருவகையில் பல நெளிவு சுளிவுகளுக்கு வழி கோலுகிறது...என்பதே உண்மை...

நீங்கள் ரஜினியின் ரசிகரா அல்லது ஆதரவாளரோ என்பது எனக்கு தெரியாது.
நீங்கள் நிறைய கேள்வி கேட்டதாக கூறினீர்கள். உங்களுக்கு, சாமான்ய மனிதனுக்கும் தோன்றும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
- ரஜினி அறுபத்து ஏழு வயது வரை என்ன செய்தார்?
-ஜெயலலிதா இருந்தபோது ஏன் இவர் அரசியலுக்கு வரவில்லை?
- இதுவரை மக்களுக்காக செய்தது என்ன ?
- ஏதாவது பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் ரஜினிக்கு உண்டா?
- ஏற்கனவே சுரணையில்லாது கிடக்கும் தமிழனை இவரின் கருத்துக்களால் பயமுறுத்துவது ஏன் ?
- இவரின் கொள்கை என்ன ?
- ரஜினியின் பின்னாலிருப்பவர்கள் யார், யார்?
- தமிழகம் எந்தெந்த துறையில் பின் தங்கியுள்ளது என்று ரஜினிக்கு தெரியுமா?
- இதுவரை எந்த ஊழலுக்கு எதிராகவாவது குரல் கொடுத்துள்ளாரா?
-முன்னுக்கு பின் முரணாக பேசும் இவர் இன்னமும் டாஸ்மாக் சென்ற பின்தான் மக்களை சந்திக்கிறாரா?
-தீவிர சிவா பக்தனான இவர் கருப்பு சட்டை அணிவது மக்களை ஏமாற்றவா?

Admk வை தேர்ந்தெடுத்தது தமிழக மக்கள்தான் அது என்கவுன்ட்டர் எடப்பாடிக்காக போடப்பட்ட ஒட்டு அல்ல. ஜெயலலிதா என்ற இரும்பு பெண்மணிக்காக போடப்பட்டது.
பாட்ஷா படம் பொழுது போக்குக்காக தமிழர்களால் பார்க்கப்பட்டது அதற்காக ரஜினி தமிழக மக்களை ஆளக்கூடாதா என கேட்பது சரியல்ல. பொழுதுபோக்குக்காக நடிக்கும் ஒரு கூத்தாடி மற்ற தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தரமான நடிகனுக்கு ஒட்டு போடவேண்டுமெனில் கமல் நூறு மடங்கு தேவலாம். கமல் படங்களில் உள்ள சமூக அக்கறை ரஜினி படங்களில் தேடவேண்டிய சூழல்....
ரஜினி நடிகனாகதான் பிரபலமான ஆளே தவிர ஒரு மக்களுக்கான பிரச்சினைகளை முன்னெடுத்து அல்ல, எனவே அவர் தகுதி பூஜ்ஜியம்.
பிரபலமான ஆளே அரசியலுக்கு வரவேண்டுமெனில் மத்திய அரசிலும் வட மாநிலங்களிலும் சல்மான்கானும், ஷாருக்கானுக்கு மட்டுமே ஆட்சி செய்யமுடியும். அரசியல் வேறு சினிமா வேறு. அரசியல் என்பது பொது வாழக்கை அது எப்படியோ காங்கிரசுக்கு எதிரான திராவிட ஆட்சியில் சினிமாவிடம் ஒட்டிக்கொண்டது. அதன் விளைவுதான் ஊழலில் திளைத்த அ தி மு க மற்றும் தி மு க ஆட்சி.
அடுத்த தலைமுறையும் சினிமாக்காரன் பின் சென்றால் தமிழனை கடவுள் கூட காப்பாற்றமாட்டார்....

ஆயிரம் கோடிக்கு மேல் மக்களின் பணத்தை கொள்ளை அடித்த நீரவ் மோடி மற்றும் பலரை கைது செய்ய இயலாத பி ஜே பி மற்றும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்த மற்றும் அடித்துக்கொண்டிருக்கும் அ தி மு க வின் குட்கா ஆட்சி செய்பவர்கள் இதைத்தான் கூறுவார்கள்.
பி ஜே பி சவாரி செய்ய ஒரு ஏமாளி குதிரை தேவை அதுதான் இந்த ஊழல் அ தி மு க. மக்களை பார்த்து இவர்கள் தனக்கெதிராக திரும்பினால் என்னாவது என்ற பயம் அதுவே இந்த குற்றச்சாட்டுக்கு காரணம்.


ரஜினி சொன்ன கருத்து தன் சொந்த கருத்தாக தெரியவில்லை. அது அ தி மு க மற்றும் பி ஜே பி இந்த கட்சிகளின் கருத்துக்களின் பிரதிபலிப்பே அன்றி வேறு அல்ல.

ரஜினி ஒன்றும் கருத்து சொல்லும் அளவுக்கு அரசியல் புலமை வாய்ந்தவர் இல்லை. ஒரு பிரபலமான நடிகன். மனதளவில் தன் மனைவி நடத்தும் பள்ளியின் வாடகை கூட தர இயலாத ஒரு கருமி. இதுவரை மக்களுக்கு ஒரு துரும்பும் கிள்ளி எறியாதவர். இவர் படங்கள் கூட தனி மனித ஹீரோயிசம் பற்றி மட்டுமே பேசும். இவர் சினிமாவில் செய்தால் அது அறப்போராட்டம் இதையே நிஜ வாழ்க்கையி செய்தால் அது சமூக விரோதிகளின் ஆர்பாட்டமா?

இட ஒதுக்கீடு தேவையே. ஆனால் அது சாதி மற்றும் மத அடிப்படையில் அமையக்கூடாது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும். ஏழ்மையான பிராமணரையும் பார்க்கலாம், பெரும் பணக்காரரான தலித்துகளையம் பார்க்கலாம் நம் சமூகத்தில் இதில் ஏன் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை ?

பொது வாழ்வில் அவர் எதிலும் பங்கு பெற்றதில்லை. பணம் மட்டுமே பிரதானமாக கொண்டவர் முதலில் இவர் மனைவி நடத்தும் பள்ளிக்கு வாடகை தரட்டும். பிறகு அரசியலுக்கு வரட்டும்......

தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி..

நிச்சயம் தெரியப்படுத்தவேண்டும். நம் கடமையும் கூட.

உண்மையே.....
நம் வாழ்வாதாரங்களையும், கலாச்சாரதையும் சீரழிக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுதான் இத்தகைய தடைக்கு காரணம்....

தங்கள் கருது முற்றிலும் உண்மைதான் நண்பரே...

ஐம்புலங்களும் செயலிழந்து
தமிழன்
சகிப்புத்தண்மை
நோயால் மீளாப்படுக்கையில்
சாகக் கிடக்கிறான்...........
இதனால்தான்
இவனுக்கு
சொந்த நாட்டிலும்
அகதி பட்டம் !!

தங்கள் கூற்று, நூறு சதவீத உண்மை.......நண்பரே !
அதனால்தான் சொந்தநாட்டில் அகதிகளாகிறோம்.....

நீங்கள் கேள்வியை புரிந்துகொள்ளாதது மிகவும் வருத்தமளிக்கிறது.............!!!!!!!!!!!!


ஆ க முருகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே