துப்புரவாளி
![](https://eluthu.com/images/loading.gif)
இவன்
புறத்தில் அழுக்கன் ...
அகத்தில் அளப்பறியா அழகன்...
இவன்
நோய் தொற்று என்று
தன் பணிக்கு விரதமிருந்ததில்லை ..
இவன்
நாற்றத்தையே சுவாசமாய் ஏற்பவன் ...
குப்பைகளே கூடாரமாய் .கொண்டவன்...
எச்சத்தையே சுற்றி வாழ்பவன்...
மிச்சத்தை உண்டு மறைபவன்...
இவன்
நம் எச்சத்தின் மிச்சத்தை
நம் இச்சையின் பிச்சையை
மனமுவந்து மருந்து தெளித்து
நறுமணம் நல்க செய்பவன்..!
மூக்கை மூடி கடக்குறோம் நாங்க
முங்கி அதுலே கிடக்குற நீங்க...
துப்புக் கெட்டு துப்புறது நாங்க
கைய விட்டு கிட்டு அள்ளுறது நீங்க...
கழிவறைனு சொல்லவே கூச்சம்...
சாக்கடை சொல்ல சங்கோஜம்...
நம் மலத்தை நாமே வெறுக்க...
சம்மதத்துடன் சமத்துவம் காப்பவன் ..!!
படிப்பறிவு இல்லாமல்
இத்தொழில் செய்யாமல் ...
பகுத்தறிவு இருப்பதனால்
நற்தொழில் செய்கிறவன் ...!!
நீ துப்புரவாளி அல்ல
தேசத்தின் தூய உறவாளி ..!!!