தேவிராஜ்கமல்- கருத்துகள்

நன்றி தம்பி. நான் நலமா இருக்கிறேன். நீங்க நலமா?

"கழிவறைனு சொல்லவே கூச்சம்...
சாக்கடை சொல்ல சங்கோஜம்...
நம் மலத்தை நாமே வெறுக்க...
சம்மதத்துடன் சமத்துவம் காப்பவன் ..!! ழிவறைனு சொல்லவே கூச்சம்...
சாக்கடை சொல்ல சங்கோஜம்...
நம் மலத்தை நாமே வெறுக்க...
சம்மதத்துடன் சமத்துவம் காப்பவன் ..!! "
அருமை மிகவும் அருமை...என் குழந்தைகள் கூட துப்புரவு தொழிலாளியை கண்டால் வணக்கம் தெரிவித்து செல்வார்கள். அவர்களும் நம்மை போல சக மனிதர்கள் தான் என நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

அருமையான வரிகள் சகோதரா.... அனைவரும் உணர வேண்டும்.

"தாய்மையை மகுடமாய் சூடியப் பெண்மை
தனிமனித ஒழுக்கத்தில் சீரழிகிறது உண்மை...
மேயவரும் கால்நடைகளுக்கு வேலியிடலாம்
பயிர்களே வேலிதாண்டின் என்ன செய்யலாம்"
என் கேள்வியும் அது தான் சகோதரி. உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. வாழ்த்துக்கள்.

கண்டுகொண்டிருக்கிறோம் என்பது தான் பெரும் வேதனை..

என்றும் கலையாத கனவாய்... தங்கள் வருகைக்கு நன்றி ஐயா...

மருந்தாய் யாருமிருப்பின் கசப்புகளும் இனிமையானதாய் மாறிவிடும் சகோதரா...

அருமையான கவி ஐயா..காதல் எவ்வளவு அழுகு என்றால் இவ்வளவு அழகாய் கவி மலரும்.

உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு
மௌனம்!
வாழ்த்துக்கள் சகோதரா...

பிஞ்சென்றும் காணாது கசக்கி எறியும்
காமுகனை...
களையெடுக்கும் கலைதனை கற்றல் அவசியம்...
திரௌபதிக்கு கண்ணன் இருந்தான்
காப்பாற்றினான்...
இங்கு எங்கள் நிர்பயாக்களுக்கும்
ஹாசினிக்களுக்கும்
காப்பாற்ற கண்ணனும் இல்லை..
எந்த சட்டங்களும் இல்லை...
தண்டனைகள் பற்றாக்குறை
தவறுகள் தலைவிரித்து ஆடுகின்றன..
கடுமை, தண்டனையில் இல்லாதவரை
கொடுமைகள் பெண்களுக்கு நிகழ்வது நிச்சயமே..
பெண்ணென்றால் போகப் பொருள்
எனும் கண்ணோட்டம் இங்கு மாறவேண்டும்...
அதற்கு மனிதனுக்குள் மனிதம்
சிறிதளவாயினும் இருக்க வேண்டும்!
வாழ்த்துக்கள் நட்பே!


தேவிராஜ்கமல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே