தாய்மையைத் தின்றக் காமம்

தாய்மையை தின்றக் காமம் ...!

காமம் தின்றது தாயை -அது
தயவின்றிக் கொன்றது சேயை
தலையங்கமாகி விவாத மேடைகள்
தயக்கமின்றிச் சாடின அப்பேயை

தாய்மையை மகுடமாய் சூடியப் பெண்மை
தனிமனித ஒழுக்கத்தில் சீரழிகிறது உண்மை...
மேயவரும் கால்நடைகளுக்கு வேலியிடலாம்
பயிர்களே வேலிதாண்டின் என்ன செய்யலாம்

தடையின்றி தீனிபோடுகின்றன தொலைக்காட்சித் தொடர்கள்
துணைநின்று தூபமேற்றுகின்றன முகநூல் வரம்பு மீறல்கள்
எதையும் செய்யத் துணிகிறது வக்கிரம்- வெறும்
சதைப்பிண்ட உணர்வுகளே உலகின் உக்கிரம்

சுயக் கட்டுப்பாடுகளை விதைத்திடுவோம்
கட்டான குடும்ப சூழலைக் காத்திடுவோம்
உரிமையற்ற உறவுகளை வரையறுப்போம்-இன்றேல்
இன்னும் பல அபிராமிகளை சந்திப்போம்..!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (8-Sep-18, 9:22 am)
பார்வை : 87

மேலே