நெஞ்சே எழு

தீவிரவாதம் கொல்
தீவிர வாதம் கொள்!
கூண்டில் கிளியாய்..
தூண்டில் மீனாய்..
அடைபடாதே!
அகப்படாதே!
சில கை விட்டாலும்
சிற கை விறி!
சிலந்தி வலையில் சிக்காமல்
சிகரம் நோக்கி செல்!
சிறு தீப்பொறியும் காட்டெரிக்கும்!
தீப்பந்தம் நீ ...
சுடர் விட்டு நெஞ்சே எழு!