இனியன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இனியன்
இடம்:  அதிராம்பட்டினம், thanjavur
பிறந்த தேதி :  25-Feb-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2017
பார்த்தவர்கள்:  515
புள்ளி:  74

என்னைப் பற்றி...

மாற்றங்கள் பிறக்கும் வரை பேனாவில் மை தீர்வதில்லை ....

எழுத்துக்கள் மட்டுமே மொழியை ஆழமாய் பதிக்கும் ....

சிந்தனைகளையும் கற்பனைகளையும் சமர்ப்பிக்கிறேன் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்....பிழை இருந்தால் மன்னியுங்கள் தோழர்களே ....

என் படைப்புகள்
இனியன் செய்திகள்
இனியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2022 11:31 pm

ஒற்றை பார்வையும்
அழகிய மென்சிரிப்பும்
இறுகிய நெஞ்சில்
இளந்தென்றலை வீச

ஏனோ ஓர் ஈர்ப்பு
சித்திரையில் ஓர் ஈரப்பதம்
கார்த்திகையாய் ஊடுருவ
அவள் பார்வை படும்தூரமெல்லாம்
புதுப்பித்த புதுமைபித்தனாய்
அவள்முன் நிற்கின்றேன்
எல்லாம் அவளுக்காக

என் தயக்கத்தில்
என் வெட்கத்தில்
என்ன சுகம் கண்டாலோ
என்னை தள்ளிவைத்தே
ரசிக்கிறாள் கொஞ்சம்
சீண்டவும் செய்கிறாள்
அவளை அறியாமல்

அத்தனை கூட்டத்தில்
அவ்வளவு சத்தத்தில்
அவளின் ஒவ்வொரு நகர்வும்
என் துடிப்பை
என் தேடலை அதிகப்படுத்த
எனை சுற்றியே வருகிறாள்
என்னை காணாது கொள்கிறாள்

வறண்ட நிலமொன்றில்
காட்டாறு பெருக்கெடுக்க
தடுப்பணைகள் எல்லாம்

மேலும்

இனியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2022 5:14 pm

புன்னகையின் மந்திரம்


தீர்க்க இயலா பல வினைகளுக்கு
புன்னகை ஓர் சிறந்த தீர்வாகும்
நம்மை அறியாமலே
நம்மில் நிறைந்த புன்னகைகள் பல
நம் துயரம் தீர்த்த புன்னகைகள் பல

நம்மை அடையாளம் காணவும்
அடையாளம் கொள்ளவும்
ஓர் புன்னகை தேவை என்ற சூழலில்
வாழும் நமக்கு புன்னகையின் மந்திரம்
புரியாத புதிராகவே அமைகிறது

சில புன்னகைகளுக்கு விடையில்லை
சிலவற்றிக்கு வினாயில்லை
அவை உணர்த்தும் எதார்த்தம் பல
அதை கடப்பதும் அனுபவிப்பதும்
நம்மை பொருத்தே அமைகிறது
இதுவே இயற்கையின் நியதி எனலாம்

நம்மில் சில புன்னகை
நம் மனதில்
நீங்கா இடம் பிடிக்கும்
அது நம் பருவத்தை
காலம் கடந்தும் அதே
அழகி

மேலும்

இனியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2021 10:58 pm

தீர்வில்லா தீ

சிறு சிறு குறும்பு
சின்ன சின்ன கோபம்
அளவான பேச்சு
அழகான உடைநடை
அனைத்தும் நீயென இருக்க

அவளின் ஒவ்வொரு
செயலிலும் உந்தன் பிரதிபலிப்பு
என்ன நான் செய்வேன்

அவள் எனதருகில் அமரும் போதும்
என்னுடன் பயணிக்கும் போதும்
நீயென நினைத்தே
என்னை நான் தொலைப்பது ஏனோ

கடப்பதே தீர்வென
எண்ணும் போதெல்லாம்
அவள் பார்வையும்
அந்த குழந்தை சிரிப்பும்
குறிப்பாக அந்த பட்டு சேலையும்
உன்னையும் என்னையும்
இணைப்பதேனோ
அவள் ரூபத்தில்

சின்ன சின்ன கிண்டல்
விளையாட்டாய் சில வார்த்தை
அவள் ஏதும் அறியாமல் செய்தாலும்
எல்லாம் அறிந்த என்மனமோ
என்னை மீண்டும் தீயில் தள்ளுவதேனோ

பேசாமல் இ

மேலும்

இனியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2021 5:53 pm

காட்சிப்பிழை

மேளச்சத்தம் ஒருபக்கம்
ஐயர் ஓசை ஒருபக்கம்
அரங்கம் முழுதும் சந்தோசம்
அவர் அவர் முகத்தில் வெளிப்பட
யாரும் அறியா நொடியில்
துடைத்த கண்ணீரை
யார் அறியோர்

காட்டிய காதலெல்லாம்
கண்முன் ஓட
பேசிய வார்த்தையெல்லாம்
செவிகளில் நிறைந்தபடி
நெஞ்சம் உடைந்து
வந்த வேலை மறந்து
நான் நின்றேன்

அவள் முகத்தில் அத்தனை இன்பம்
அவன் அருகினில் அவள் விருப்பப்படி
ஊர் அறிய தன் காதலைசொல்லி
புத்துணர்ச்சியாய் புதுமகளாய்
அவள் அவன் அருகில் நிற்க
நான் அவள் எதிரில்
என் காதலை எண்ணியபடி
நின்றுகொண்டிருந்தேன்

ஆம் அவளும் மணமேடையில்
நானும் மணமேடையில்
அவள் அவள் துணையோடு
நான் என் தொழில

மேலும்

இனியன் - இனியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2020 10:13 am

காதலும் சாதியும்

மனமொத்து வந்தவொன்று
சாதியில் சிக்கி
நீதிக்கி போராடுகிறது

ஐம்புலனால் உணர
முடியாத ஒன்று
இன்று இரு உயிரை
தினந்தினம் கொல்கிறது
ஏன் இந்த நிலை ?

காதல் பொதுதானே
சாதி பார்த்தா தோன்றும்
சாதியை ஒழிக்கும் ஆயுதம்
காதல் என்கிறார்கள்
நடைமுறைப்படுத்த
உயிரையே பணயம் வைக்கிறோம்
ஆனால் வெற்றி
நூரில் ஒருவருக்கே

என்ன இருக்கிறது அதில்
எமக்கு புலப்படவில்லை
ஒருவேளை எம்
பார்வையும் புரிதலும் தவறோ

தன் பிள்ளையைவிட
உயர்ந்த ஒன்றாகிறது
தன் பிள்ளையை தன்
கையாலே கொல்ல தூண்டுகிறது
ஏன் எங்களை பெற்றீர்கள் ???

கல்லாதவன் மதிகெட்டான்
என்றால் கற்றவனும்
மதிகெட்டானே சாதியால்

மேலும்

நன்றி தோழமையே 23-Apr-2020 12:50 pm
நன்றி தொழமையே 23-Apr-2020 12:45 pm
காதலுக்கும் சாதிக்கும் இடையில் எத்தனை துயரங்கள் எத்தனை வலிகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு தினந்தினம் போராடுகிறோம் .... உண்மை தான்... நட்பில் சாதியை ஒழித்துவிட்டு ஏன் திருமணத்தில் மட்டும் தூக்கிப்பிடிக்கிறீர்கள் ? அருமை வரிகள் 20-Apr-2020 3:02 pm
இனியன் - சரவணபிரபு புஷ்பவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2017 5:34 am

*கரிசல் அழகி அவள்.*

அடி அழகே
கோள விழியழகே
கொத்தும் சிரிப்பழகே
கொஞ்சும் பேச்சாலே
என் மனதைக்
கொள்ளை கொண்ட பேரழகே

சங்குக் கழுத்தழகே
சடைபின்னிய சிரத்தழகே
சத்தமின்றி யுத்தமிடும்
மௌன மொழியழகே
மதிமயக்கும்
உன் மத்திரப் புன்னகை
அதுவும்அழகே

மருதாணிச் செவப்பழகே - அடி
மச்சமுள்ள மாரழகே
மிச்சம் வைக்கத் தோனாம
எனைச் சொக்கவைச்சுப்
போனதடி உன் உடலழகே

தாழம் பூ நிறத்தழகே
தாவணி இடையழகே
அதைத் தாண்டவிடாமல்
எனை நிறுத்தும்
தங்க நிற உடையும் அழகே

தங்கக் கொலுசழகே
தத்தித் தாவும்
உன் பாதச் சுவடழகே
உச்சி முதல் உனது
உள்ளங்கால் வரை
அனைத்தும் அழகே.!

வஞ்சிக்க கொடியே
ஆடி அழகுச் சிலையை

மேலும்

நனி நன்றி தோழமையே🙏🙏🙏 29-Nov-2017 1:16 pm
மிக்க நன்றி நண்பரே🙏🙏🙏 29-Nov-2017 1:15 pm
அருமை.... 28-Nov-2017 1:50 pm
nantru oru paadal polave erukkirathu .. 28-Nov-2017 3:40 am
இனியன் - இனியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2017 10:27 am

கருக பட்டு சேல
நீ கட்டி வந்த வேல
என் மனசதொட்டு சொல்ல
உன்போல எவளுமில்ல

உன்ன என்னி தானே
இன்று உள்ளம் வாடுறேனே
என்ன செஞ்ச புள்ள
என்மனசு இங்க இல்ல

கருகமணி ஓன்னு
அவள் கழுத்தில் ஆடுதம்மா
மொட்டு இதழ்கள் ரெண்டு
என் நெஞ்சை உலுக்குதம்மா

அன்ன நடையில் தானே
அவள் அசைந்து நடந்து வந்தால்
சின்ன இடையில் தானோ
இந்த இதயம் சிக்குதம்மா

தயக்கம் கொண்டு தானே
அவள் தயங்கி தயங்கி பேச
மயக்கம் கொண்டேன் நானே
கருவிழியை கண்டதாலே

அன்பு கொண்ட பேச்சில்
புதுவுணர்வு பரவுதேனோ
அளவு கொண்ட சிரிப்பில்
என் நெஞ்சம் தொலைந்ததம்மா

கோவையிதழ் ஓரம் சிறு
மச்சம் ஒன்றை கண்டேன்
பாவி மன

மேலும்

நன்றி தோழரே... 10-Nov-2017 11:47 am
நன்றி தோழரே... 10-Nov-2017 11:47 am
ஆஹா... அருமை நட்பே,..... 10-Nov-2017 11:25 am
அருமை தோழனே.... 10-Nov-2017 11:01 am
இனியன் - தங்க பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2017 11:48 am

சுட்டெரிக்கும் உச்சிப்பொழுது
சுந்தரி உன்ன பாத்தபோது
கண்ணு ரெண்டும் குளிருதடி-உன்
கவர்ச்சி என்ன இழுக்குடி

முதல்முறை பார்த்தேனடி
மூச்சை விடக்கூட மறந்தேனடி-உன்
அழகைப் பார்த்து உறைந்தேனடி
அசையா சிலையா ஆனேனடி

தாவனி உடுத்திய தாமரையே-என்னை
தவிக்கவிட்டு போகுறியே
ஏண்டி நீ,இப்படி பாக்குறியே
என்உசுர எடுத்திட்டு போகுறியே

சிரிச்சு சிரிச்சு நீ போற
சின்னாபின்னமா நான் ஆனேன்
திரும்பி திரும்பி நீ பாக்க
திசைய மறந்து நான் போறேன்

ஏதேதோ ஆகிப் போச்சு
எப்போதும் கேட்குது உன்பேச்சு
எல்லாம் இப்ப மாறிப் போச்சு
என்னுள் காதல் வந்தாச்சு...💘

மேலும்

நல்ல கவிதை...! 10-Nov-2017 8:24 pm
அருமை காதல்! 10-Nov-2017 4:16 pm
நன்றி இனியன் 10-Nov-2017 10:58 am
அருமை தோழரே..... 10-Nov-2017 10:29 am
இனியன் - yazhinivalan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2017 1:38 am

காதல்
இது மட்டுமே
சீறும் சிறுத்தைகளை
சிணுங்கும் சில்வண்டுகளாய்
மாற்றிப் போடும்

இது மட்டுமே
எக்கு இதயங்களை
பனி துளிகளாய்
தூர செய்யும்

இது மட்டுமே
ஆர்பரிப்பை விரும்பியவனை
மவுனத்தை நேசிக்க
சொல்லி தரும்

இது மட்டுமே
தூங்கா வரத்தையும்
சாகா வரத்தையும்
இரு கண்களுக்கும்
பரிசளித்து செல்லும்

இது மட்டுமே
தோழமையை தள்ளிவிட்டு
தனிமையின் சுகம்
தேட சொல்லும்

இது மட்டுமே
தெரிந்ததை மறக்கச்செய்து
தெரியாததை எல்லாம்
சொல்லியும் தரும்
செய்யவும் சொல்லும்

இது மட்டுமே
ஒன்றும் இல்லாமலே
புன்னகை பூக்களை
இதழில் ஒட்டி செல்லும்

இது மட்டுமே
கண்ணீர் துளிகள

மேலும்

காதல் இது மட்டுமே... கனிமொழிகளில் கவலையின் மருந்தாய் தனிமையில் நினைவின் விருந்தாய்... அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தோழமையே... தூர - தூற 04-Apr-2017 9:39 am
காதல் இது மட்டுமே அனைத்தும் அருமை சகோ வாழ்த்துக்கள்... 04-Apr-2017 9:02 am
இனியன் - இனியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2017 1:03 pm

யுவன் 20 வருட பயணம்

இசையின் வாரிசு
என்பதினாலோ எப்பயிற்சிமின்றி
உன் பயணத்தை தொடங்கினாய்...

ஆரம்பகாலத்தில் நீ சந்தித்த இன்னல்கள் கொஞ்சமல்ல தலைவா

"பூவெல்லாம் கேட்டுப்பாரில் "புகழ் பெற்றாலும் இத்திரையுகம்
இசைஞானியின் மகனா இவன்
என கூறிய போதும் கொஞ்சமும் அஞ்சாது துள்ளலோடு "துள்ளுவதோ இளமையில் "முதல் முத்திரை பதித்தாய் நீ...

அன்று உன்னை கண்டு வியந்தது இவ்வுலகம் "காதல் கொண்டேன்" பார்த்த பிறகு உன்மீது காதல் கொண்டவர்களில் நானும் ஒருவனே...

பாடல் உணர்த்தும் படமென்பதற்கு உன் "7g "யின் மெட்டுக்கள் சிறந்த உதாரணம் அது காலம் கடந்தும் உன் புகழை பேசும்....

படத்திற்கு பாடல் எந்த அளவு முக்கி

மேலும்

இனியன் - இனியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2017 7:39 pm

உன் நினைவில் என் வாழ்க்கை

ஏன் இந்த பார்வை
எதற்கிந்த பயணம்
எதுவரை போகும் என்றுறைப்பாயோ...

உன் அன்பை தேடி
என் நிலை மாறி
உன்மடி அடைந்தேன்
அதை மறந்தாயோ...

உன் நிழலை தாங்கியே
உன்கரம் பிடித்துமே
உன் பின்னே வருகிறேன்...

எதை நோக்கி செல்கிறாய்
செல்கிறாய் நீ....

எதைக்காண அழைக்கிறாய்
நான் விரும்பும் முன்னமே
விழிமூடி கொள்கிறாய்
கொள்கிறாய் நீ....கொள்கிறாய் நீ...

உனக்காக நானும் உயிர் துறப்பேனே என்மேலொரு கனிவில்லையா ஏன் இதை செய்தாய்...

விழியீரம் துடைக்க முகபாவம் சிவக்க செந்திரலாய் உன்னருகில் நான் இருப்பேனே...

யாரும் காணாத காட்சி
பார்க்காத வாழ்க்கை
நாம் காண போவோ

மேலும்

நன்றி தோழரே.... 17-Mar-2017 12:56 pm
அழகிய கவி....காதல் பயணம் புரிந்தும் புரியாதவை 15-Mar-2017 8:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
சஜா

சஜா

வவுனியா,இலங்கை
தானியேல் நவீன்ராசு

தானியேல் நவீன்ராசு

கும்பகோணம்,தமிழ்நாடு.

இவர் பின்தொடர்பவர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (18)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்

பிரபலமான எண்ணங்கள்

மேலே