கரிசல் அழகி அவள்

*கரிசல் அழகி அவள்.*

அடி அழகே
கோள விழியழகே
கொத்தும் சிரிப்பழகே
கொஞ்சும் பேச்சாலே
என் மனதைக்
கொள்ளை கொண்ட பேரழகே

சங்குக் கழுத்தழகே
சடைபின்னிய சிரத்தழகே
சத்தமின்றி யுத்தமிடும்
மௌன மொழியழகே
மதிமயக்கும்
உன் மத்திரப் புன்னகை
அதுவும்அழகே

மருதாணிச் செவப்பழகே - அடி
மச்சமுள்ள மாரழகே
மிச்சம் வைக்கத் தோனாம
எனைச் சொக்கவைச்சுப்
போனதடி உன் உடலழகே

தாழம் பூ நிறத்தழகே
தாவணி இடையழகே
அதைத் தாண்டவிடாமல்
எனை நிறுத்தும்
தங்க நிற உடையும் அழகே

தங்கக் கொலுசழகே
தத்தித் தாவும்
உன் பாதச் சுவடழகே
உச்சி முதல் உனது
உள்ளங்கால் வரை
அனைத்தும் அழகே.!

வஞ்சிக்க கொடியே
ஆடி அழகுச் சிலையை
உனைக்கான எத்தனை
மைல் நடந்தாலும்
என் வேகம் கூடுதடி
உன்மேல் உள்ள
தாகம் இன்னும் தனியலடி..

ஒத்தையடி பாதையிலே
ஒத்தையில நீ வரும்போது
ஒத்துக்கிட்டு நின்னு
ஒத்த முத்தம்
கன்னத்தில் கொடுத்தியேடி
உன் எச்சில் ஈரம்
காஞ்சிருச்சு
உன் நினைப்பும்
என் நெஞ்சுக்குள்ள
விருச்சமாக வளர்ந்திருச்சு

கவலையில்லாம போடி
உன்னைக் களாவங்க
உன் வீட்டுப்பக்கம்
காலையில வாரேன்
உனக்கு சம்மதமும் தாறேன்..!

எழுதியவர் : கரிசல்காட்டு நாயகன் சரவன (27-Nov-17, 5:34 am)
பார்வை : 287

மேலே