காதல் இது மட்டுமே

காதல்
இது மட்டுமே
சீறும் சிறுத்தைகளை
சிணுங்கும் சில்வண்டுகளாய்
மாற்றிப் போடும்

இது மட்டுமே
எக்கு இதயங்களை
பனி துளிகளாய்
தூர செய்யும்

இது மட்டுமே
ஆர்பரிப்பை விரும்பியவனை
மவுனத்தை நேசிக்க
சொல்லி தரும்

இது மட்டுமே
தூங்கா வரத்தையும்
சாகா வரத்தையும்
இரு கண்களுக்கும்
பரிசளித்து செல்லும்

இது மட்டுமே
தோழமையை தள்ளிவிட்டு
தனிமையின் சுகம்
தேட சொல்லும்

இது மட்டுமே
தெரிந்ததை மறக்கச்செய்து
தெரியாததை எல்லாம்
சொல்லியும் தரும்
செய்யவும் சொல்லும்

இது மட்டுமே
ஒன்றும் இல்லாமலே
புன்னகை பூக்களை
இதழில் ஒட்டி செல்லும்

இது மட்டுமே
கண்ணீர் துளிகளையம்
கனத்த இதயத்தையும்
தந்து போகும்

இது மட்டுமே
இது மட்டுமே
அத்தனை சுகத்தையும்
தந்து உன் மனசை
ஆகாயஉச்சி நோக்கி
பறக்க செய்யும்

இது மட்டுமே
அத்தனை ரணத்தையும்
தந்து உன்னை
அகால பாதாளத்தில்
தூக்கியும் போடும்

இது மட்டுமே
வாழ்ந்தாலும் சுகம்
வலித்தாலும் சுகம் !!!


-யாழினி வளன்

எழுதியவர் : யாழினி valan (4-Apr-17, 1:38 am)
சேர்த்தது : yazhinivalan
பார்வை : 240

மேலே