அவள் அழகு

கருக பட்டு சேல
நீ கட்டி வந்த வேல
என் மனசதொட்டு சொல்ல
உன்போல எவளுமில்ல

உன்ன என்னி தானே
இன்று உள்ளம் வாடுறேனே
என்ன செஞ்ச புள்ள
என்மனசு இங்க இல்ல

கருகமணி ஓன்னு
அவள் கழுத்தில் ஆடுதம்மா
மொட்டு இதழ்கள் ரெண்டு
என் நெஞ்சை உலுக்குதம்மா

அன்ன நடையில் தானே
அவள் அசைந்து நடந்து வந்தால்
சின்ன இடையில் தானோ
இந்த இதயம் சிக்குதம்மா

தயக்கம் கொண்டு தானே
அவள் தயங்கி தயங்கி பேச
மயக்கம் கொண்டேன் நானே
கருவிழியை கண்டதாலே

அன்பு கொண்ட பேச்சில்
புதுவுணர்வு பரவுதேனோ
அளவு கொண்ட சிரிப்பில்
என் நெஞ்சம் தொலைந்ததம்மா

கோவையிதழ் ஓரம் சிறு
மச்சம் ஒன்றை கண்டேன்
பாவி மனம் ஏனோ
இன்று தூக்கம் கெட்டதம்மா

கருக பட்டு சேல
நீ கட்டி வந்த வேல
என் மனசதொட்டு சொல்ல
உன்போல எவளுமில்ல

எழுதியவர் : சே.இனியன் (10-Nov-17, 10:27 am)
சேர்த்தது : இனியன்
Tanglish : ennaval
பார்வை : 327

மேலே