சஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சஜா |
இடம் | : வவுனியா,இலங்கை |
பிறந்த தேதி | : 12-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 466 |
புள்ளி | : 136 |
மன்னிக்கவும்!!!
நான் இப்பொழுதுதான் தமிழில் எழுதிப்பழகுகிறேன். என் தமிழில் உள்ள எழுத்து பிழைகளை மன்னிக்கவும்.
அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்பா கேட்டார்,
“மகளே!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”
மகள்.... கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள் ..
“நூல்தாம்ப்பா பட்டத்தின் சுதந்திரத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது ”.
அப்பா சொன்னார், “இல்லை மகளே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”
மகள் சிரித்தாள். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.
“ஒழுக்கம் இப்படியானதுதான் மகளே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
அதிலிருந்து அறுத்துக்
தேடித் தொலைந்து போனேன்
எதிர்பார்த்து ஏமாந்து போனேன்
நேசித்து நொடிந்து போனேன்
என்னடா வாழ்க்கை என்றேன்
இனி எப்போதும் இறக்க துணிந்தேன்
போதி மரம் தேவையில்லை
நான் புத்தனாக போவதுமில்லை
துறப்பதற்கு ஒன்றும் இல்லை
துறவுகொள்ள போவதில் அர்த்தமில்லை
சிறுபிள்ளையாய் அழுது பார்த்தேன்
கேட்டது எதையும் தரவில்லை
அன்பாய் அழைத்து பார்த்தேன்
அவன் என்றும் வரவேயில்லை
கடன் வாங்கி காணிக்கைப் போட்டேன்
கண் திறந்து பார்க்கவே இல்லை
கண்ணீர் சிந்தி கல்லும் கரைந்திட
கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்
கருணையின்றி தருகிறான் இடர் !
சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது
மனைவி உயிருக்கு போராடுகிறாள்
இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில்
உடல் முழுவதும் கொடுமையான நோய்கள்
தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள்
தொல்லை தரும் பசி என்று
தனது சுயநலத்திற்கு
பரிதாப வார்த்தைகளை
அடகு வைத்து காசு கேட்காமல் !,
பார்வை இல்லை இருந்தும்
நேர்வழியில் செல்ல கையில்
நீண்ட கம்பியொன்று ,
உலகத்தில் தனக்கு தெரிந்த நிறம்
கருப்பு ஒன்றுதான் என்று
மீண்டும் சொல்லும்
கறுப்புக் கண்ணாடி கண்களில்,
சொற்ப நேரமே நின்று செல்லும்
பேருந்துகளில் கூட நடை தளராமல்
கைகளில் பேனா , பென்சில்களை ஏந்தி
விற்று செல்லும் அவரை
பார்த்தால் மறுக்காமல் ஏதேனும்
வாங்கிகொள்ளுங்கள் நீங்களும் .
கை
எந்தக் கடலின் வறட்சியில்
எந்த மேகக் குளிர்ச்சியில்
சொந்தமில்லா நில மகளுக்கு
வெள்ளிக்கொலுசு மாட்டுகிறாய்!
மலைகள் நனைக்கிறாய்!
மரங்கள் துளிர்க்கிறாய்!
அருவிகள் பெருக்கி
ஆறாய்ப் பாய்கிறாய்!
வெள்ளமென்று சொல்லிக்
கொள்ளாமல் - வீதிஉலா
தெருக்கூத்து மேவுகிறாய்!
நிஜமல்ல நீ!
பொய்த்து ஒளிகிறாய்!
பெய்து ஓய்கிறாய்!
பருவகாலம் மாற்றுகிறாய்!
தேவை நீ என்கையில்
துளி வீழாமல்-
பரிதவிக்கவைத்துப் பின்
உதவுவார்ப் போல்
பாசாங்கு செய்கிறாய்!
நிஜமல்ல
மழை என்று
உன் சரிதைச்
சொல்லுகின்றேன்!
நிரூபிப்பதாய் இருந்தால்
பதில் சொல்லிப் போ!
கன மழையாய் அல்ல
கண மழையாய்!
தாய்ப் பால்
வேண்டிடும்
சிசுக்களாய்
உன் தயாளத்திற்
என் விழி
எப்போ உன்னிரு
கண்களையும்
பார்த்ததோ
அன்று முதல்
இன்று வரை
எனக்கு காதல்
தினம் தான்
எனக்கு இந்த
காதலர் தினமொன்றும்
புதுமையில்லையடா
நீ தூவிச் சென்ற
பார்வை நிமிடத்திலிருந்து
நான் கொண்டாடுகின்றேன்
கண்ணீர் தெளித்து
மங்களகரமாக என்னோட
காதல் தினத்தை!!!
நல்ல நட்பு!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
'நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.' (அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.)
தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ
வணக்கம்
ஊடகம் ..
இந்த ஊடகம் என்றால் என்ன ?
இன்றைய ஊடகத் துறையின் நிலை தான் என்ன?
பொதுவாக ஊடகத் துறை என்றாலே பலரும் முகம் சுழிக்கக் காரணம் என்ன?
இந்த மீடியாக்களால் தான் இவ்வளவு பிரச்சனை ,விபச்சார மீடியாக்கள்.
இப்படி ஊடகங்களை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் இது யாருடைய தவறு .?
ஊடகத் துறை என்பது நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கு மட்டும் அல்ல
பொறுப்பான துறையும் தான் .
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எதுவென்றாலும் உங்களை
சிரிக்கவோ சிந்திக்கவோ
வைத்த படி தான் நகர்கிறது .
நீங்கள் தான்
சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்து
சிரிக்க வேண்டிய நேரத்தில் சிந்திக்கிறீர்கள் .