ஊனத்தின் முகவரி!!!

சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது
மனைவி உயிருக்கு போராடுகிறாள்
இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில்
உடல் முழுவதும் கொடுமையான நோய்கள்
தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள்
தொல்லை தரும் பசி என்று
தனது சுயநலத்திற்கு
பரிதாப வார்த்தைகளை
அடகு வைத்து காசு கேட்காமல் !,

பார்வை இல்லை இருந்தும்
நேர்வழியில் செல்ல கையில்
நீண்ட கம்பியொன்று ,
உலகத்தில் தனக்கு தெரிந்த நிறம்
கருப்பு ஒன்றுதான் என்று
மீண்டும் சொல்லும்
கறுப்புக் கண்ணாடி கண்களில்,
சொற்ப நேரமே நின்று செல்லும்
பேருந்துகளில் கூட நடை தளராமல்
கைகளில் பேனா , பென்சில்களை ஏந்தி
விற்று செல்லும் அவரை
பார்த்தால் மறுக்காமல் ஏதேனும்
வாங்கிகொள்ளுங்கள் நீங்களும் .
கை நீட்டி பிச்சை எடுப்பது
எமது உரிமை என்பது இறந்து .
கண்கள் இழந்தும்
கை நீட்டி விற்று பிழைப்பது
எனது திறமை என்ற
நம்பிக்கை பிறக்கட்டும் !.


கவிப் புயல்
சஜா. வவுனியா

எழுதியவர் : சஜா (16-Nov-17, 11:12 am)
சேர்த்தது : சஜா
பார்வை : 79

மேலே