புதிய மனிதனின் ஒற்றை நாணயம்

புதிய மனிதன் ஒற்றை நாணயம்
கனவுகள் சுமக்கும்
சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது
உடல் என்ற பெயரிட்டு
ஒற்றை மனிதனுக்கு
ஆயிரம் பெயர்கள் நேற்று .


பணத்தினால் ஒன்று
பதிவியினால் ஒன்று
பாசத்தினால் ஒன்று
கோபத்தினால் ஒன்று
சாதனையினால் ஒன்று
சாதியினால் ஒன்று
சண்டையினால் ஒன்று
நிறத்தினால் ஒன்று
குணத்தினால் ஒன்று என
ஒவ்வொருவரின் இதழ்களிலும்
உதட்டு சாயம் போல் ஒட்டி
ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன
சற்றுமுன்வரை….
அத்தனையும் மாறிப்போனது
இறந்து போன சில நொடிகளில்
நெற்றியில் ஒட்டிவைத்த
அந்த ஒற்றை நாணயத்தால்…
பிணமென்று . .

எழுதியவர் : சஜா (16-Nov-17, 11:08 am)
சேர்த்தது : சஜா
பார்வை : 102

மேலே