ஊடகம் என்றால் என்ன -கயல்விழி

வணக்கம்

ஊடகம் ..
இந்த ஊடகம் என்றால் என்ன ?

இன்றைய ஊடகத் துறையின் நிலை தான் என்ன?

பொதுவாக ஊடகத் துறை என்றாலே பலரும் முகம் சுழிக்கக் காரணம் என்ன?

இந்த மீடியாக்களால் தான் இவ்வளவு பிரச்சனை ,விபச்சார மீடியாக்கள்.
இப்படி ஊடகங்களை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் இது யாருடைய தவறு .?

ஊடகத் துறை என்பது நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கு மட்டும் அல்ல
பொறுப்பான துறையும் தான் .

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எதுவென்றாலும் உங்களை
சிரிக்கவோ சிந்திக்கவோ
வைத்த படி தான் நகர்கிறது .
நீங்கள் தான்
சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்து
சிரிக்க வேண்டிய நேரத்தில் சிந்திக்கிறீர்கள் .

ஒவ்வொரு ஊடகவியலாளரும் ஒரு விடயத்தை கையில் எடுக்கும் போது
இது நிச்சயம் மக்களை சென்றடைய வேண்டும்
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றே உழைக்கிறான்
அதை மக்கள் கண்டுகொள்ளாதபோது அல்லது மீண்டும் அதே தவறு நடைபெறும் போது அந்த இடத்தில் நடைபிணம் ஆகிறான் .

ஒரு சில அரசியல் அடிமை ஊடகங்கள் தவிர்த்து மற்றைய அனைத்து ஊடகங்களும் மக்களிடம் நெருங்கவும் நேர்மையாய் செயற்படவுமே முயற்சிக்கின்றன .
அவ்வாறான ஊடகங்களுக்கு ஏதோ ஒரு வகையில் மிரட்டல் அல்லது இடைஞ்சல் வருகிறது அதையும் எதிர்த்து
உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றால் மக்கள் கண்டுகொள்வதில்லை காரணம் இது தான் .
பத்திரிக்கை யெனில் எம் மக்கள் புகழ் பெற்ற பத்திரிகையை தான் முழுவதும் படிப்பார்கள் சாதாரண பத்திரிகையில் தலைப்பு மட்டும் தான் .
தொடர்ச்சி மறு பக்கத்தில் என்று இருந்தால் அந்த பக்கத்தை திருப்பவே மாட்டார்கள் .இதே செய்தி தான் அந்த பிரபலம் பத்திரிகையிலும் இருந்ததே என்பார்கள்
அதையும் மீறி படிப்பவர்கள் ஐயோ இந்த பத்திரிகைக் காரன் பொய் தான் எழுதுறான் என்பார்கள் .
உண்மையின் நிலை இது தான்

அடுத்து வானொலி .
செய்திகளுக்காக மட்டும் அதிக வானொலிகள் இல்லை
மூன்று வேளை செய்திகள் மற்றும் மணித்தியால விஷேச செய்திகள் என இருக்கும் .
இதில் விஷேச செய்தி என்றதும் காது கொடுப்போர் விரிவான செய்திகளை
எப்போதுமே கேட்க மாட்டார்கள்.
ஏதும்
அரசியல் வால் பிடிக்கும் பிரபல வானொலி செய்தி எனில் கேட்க வாய்ப்பு உள்ளது .

அடுத்து தொலைக்காட்சி

செய்திக்கான நேரத்தில் சீரியல் போகும்
யார் பார்ப்பார் செய்தி ?
அரைகுறையாக பார்த்து விட்டு அலரிகொண்டு இருப்பார்கள் .

நீங்களே சொல்லுங்கள் உண்மையா பொய்யா ?

கற்பழிப்பு பற்றிய செய்தி ஒன்று சில மாதங்களுக்குமுன்
இந்தியா சின்ன பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்தது அதில் கெடுக்கப் பட்ட பெண்ணின் மார்ப்பு மற்றும் பெண்ணுறுப்புப் பகுதி அம்புக்
குறியால் சுட்டிக் காட்டப் பட்டு இருந்தது

அதை பார்த்ததும் எனக்கே சற்று கோவம் அந்த பத்திரிகை மேல் .
உடனே
சில மாதர் சங்கங்கள் போர் கொடி தூங்கினார்கள்
எங்கள் போராளிகள் சிலரும் பொங்கினார்கள் .
பார்க்கவே அசிங்கமா இருக்கு இப்படி எல்லாருக்கும் அவள் உடலுறுப்பை காட்டுறானுகள் என்று.

படித்தவுடன் எனக்கு வந்த கோவம் சற்று சிந்தித்ததும் தனிந்தது .

மரணித்தவளின் மார்ப்பை காட்டியதும் போராடிய மகளீர் மரணித்துக் கொண்டிருக்கும் எவருக்காகவும் போராடுவது இல்லை .
அசிங்கமான பத்திரிகை விபச்சார பத்திரிகை என பொங்கிய போராளி எவரும்
பெண்ணை கெடுத்தவனை தட்டிக் கேட்கவோ தண்டனை பெற்றுக் கொடுக்கவோ முயற்சிக்காமல் இருப்பது அசிங்கம் இல்லையா?

எப்போது
மீடியாக்கள் வியாபாரம் தான் பார்கிறார்கள் என்ற எண்ணம் தான் மக்கள் மனதில் ஆனால் ஒவ்வொரு ஊடகவியளாரரும் உயிரை கொடுத்து போராடுகிறார்கள் உண்மைகளை உங்களிடம் சேர்க்க ஆனால்
நிஜங்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை
நிழல்களின் பின்னால் சென்றுகொண்டு நிஜத்தை நிழலாக்குகின்றீர்கள்
இது தான் உண்மை.

உங்கள் மேல் தவறை வைத்துக்கொண்டு ஏன் அடுத்தவரை குற்றம் சொல்கிறீர்கள்
கூத்தாடிகளின் செய்திக்கு தான் (நடிக நடிகைகளின்) முன்னுரிமை கொடுக்கிறது ஊடகம் என்கிறீர்கள் அப்படி ஒரு விடயம்
ஊடகங்களில் இடம் பெறா விட்டால் உங்களுக்கு அப்படி ஒரு
ஊடகம் இருப்பதே நினைவில் இருக்காது .

இன்றைய நாட்களில் இன்னொரு பக்கம் செய்தி வலைதளங்கள் தலைப்புகளை கண்டதுமே படிக்க ஓடுகிறார்கள் உள்ளே எதுவும் இருப்பது கிடையாது இதையே பத்திரிகை படிப்பதிலும் காட்டலாமே .!

புதிதாக ஒரு செய்தி தளத்தில் இருந்து பகிரப் பட்டு இருந்தது தலைப்பு இது தான்
"நாற்பது வெட்டிய தலைகளுடன் கொழும்பை நோக்கிச் செல்ல தயாராக இருந்த லொரி ஒன்றை வவுனியா பொலிஸார் மீட்டனர் லொரி ரைவரும் கைது "
ஒரு நிமிடம் செய்தியை பார்த்ததும் திகைத்து விட்டேன் .
விரிவான செய்திகளை பார்த்த போது நாற்பது மாட்டுத் தலைகள் .
மாடும் உயிர் தான் இல்லை என்று சொல்லவில்லை அதை விபரமாக எழுதலாமே?
அதற்கான விருப்புகள் சுமார் மூவாயிரத்திற்கு மேல் இருந்தது.


இப்படியான செய்திகளை விரும்பிப் படிக்கும் எவரும்
விழிப்புணர்வு செய்திகளை படிப்பதில்லை ஏன் கேட்பதும் இல்லை.

இலங்கையில் தினமும் ஆகக்குறைந்தது 10 தொடக்கம் இருபது வரை சடலங்கள் மீட்கப் படுகின்றது ,கிணற்றில்,குளத்தில் காட்டில்,ரோட்டில் என்று
இதில் அதிகமானோர் பெண்கள்.

அனைத்து ஊடகங்களில் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்கள்
பாதுகாப்பாக இருங்கள் நடப்பதற்கான காரணத்தையும் சொல்கிறார்கள் யார் கேட்டீர்கள் சொல்லுங்கள் .?
கொலைகள் கொள்ளைகள் கூடிக்கொண்டே இருக்கிறதே தவிற குறையவே இல்லை .

உங்கள் மேல் இருக்கும் தவறை ஊடகங்கள் மேல் ஏன் திணிக்கிறீர்கள் .?

தனியார் வகுப்புகள்
பேரூந்துகள் (தரிப்பிடங்கள் )
கடற்கரைகள்
உணவகங்கள் இப்படி எங்கு பார்த்தாலும்
பதினைந்து வயது முழுமை பெறாத
சின்ன தங்கைகள் இருபத்தைந்து வயதையும் கடந்த ஆடவனுடன்
கரங்களை கோர்த்த படியோ கன்னத்தை உரசியபடியோ ஏன் கட்டிப் பிடித்த படியும் இருக்கிறார்கள்
இதன் விளைவுகள் விபரீதத்தில் முடிகிறது
கண் கூடாக பார்த்தும் இருக்கிறோம்
இதை பற்றி விடிய விடிய சொல்லுங்கள் எவரும் கண்டுகொள்ளப் போவதில்லை
இதே
நீங்கள் சொல்லும் நடிக நடிகைகள் எனில்
தேடித் தேடிப் பார்ப்பீர்கள் .

நீங்களே சொல்லுங்கள் கொலை செய்யப் பட்ட அல்லது கற்பழிக்கப் பட்ட
செய்திகளை பார்ப்பீர்களா.?
அல்லது
சுச்சித்ரா லீக்ஸ் பார்ப்பீர்களா .?

ஒரு தேவையான செய்தியை உங்களிடம் சேர்க்க உண்மையான ஊடகவியலாளர் படும் பாடு அறிந்திருக்கின்றீர்களா?

இருந்த இடத்தில் எதுவும் கிடைப்பதில்லை
உயிரை கையில் பிடித்தபடி
வெயிலில் மழையில் அடி உதை
இவைகளையும் மீறி செய்திகளை
உண்மை என்று உறுதி படுத்தி
பின்
அதை ஊடகம் ஒன்றிடம் ஒப்படைக்கிறான்
அது உண்மையான ஊடகமாக இருக்கும் பட்சத்தில் அந்த செய்தியை வெளியிடும்
முன் படும் பாடுகள் உங்களுக்கு புரியாது
உண்மையை உங்களுக்குகாக உயிரோடு போரடி தெளிவு படுத்தும் போது
நீங்கள்
உணராமல் கடந்து செல்வீர்கள் பாருங்கள்
அடி உதை திட்டல் வெயில் மழை இவை எதிலும் கிடைக்காத வலியினை ஒவ்வொரு ஊடகவியலாளனும் உணர்வான் .

இதில் இன்னொரு ரகம் உண்டு அதாவது நீங்கள் விரும்பும் பிரபல அரசியல் வால் பிடிக்கும் ஊடகங்கள்
மேல் குறிப்பிட்ட அனைத்தையும் தாங்கி ஊடகவியலாளன் செய்தியினை சேகரித்து ஒப்படைத்த பின் அதை வெட்டி கொத்தி
இவர்கள் வால் பிடிக்கும் அரசியல் வாதி அல்லது கட்சியை முன் நிறுத்தி அந்த செய்தியையே மாற்றி அமைத்திருப்பார்கள்
அதை
தான் நீங்கள் நம்புவீர்கள் .
பின்
ஒட்டு மொத்த ஊடக துறையையும் கேவலப் படுத்துவீர்கள் .

முதலில்
உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் .
ஒட்டு மொத்த ஊடகங்களும் சரியான பாதையில் தான் பயணிக்கிறது என்று நான் சொல்லவில்லை
சரியான பாதையில் பயணிக்கும் ஊடகங்களை தேர்வு செய்ய சொல்கிறேன் .

எழுதியவர் : கயல்விழி (19-Mar-17, 6:09 pm)
பார்வை : 9448

சிறந்த கட்டுரைகள்

மேலே