மு குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மு குமார்
இடம்:  திருப்போரூர்
பிறந்த தேதி :  10-Jun-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Nov-2020
பார்த்தவர்கள்:  520
புள்ளி:  33

என்னைப் பற்றி...

முதுகலை ஆசிரியர், (தாவரவியல்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம், செங்கல்பட்டு மாவட்டம்.\r\n\r\n*திருப்போரூர் கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின் இணை செயலாளர்.\r\n\r\n*திருப்போரூர் திருக்குறள் பேரவையின் இணை செயலாளர்.\r\n*பட்டிமன்ற பேச்சாளர்\r\n*எழுத்தாளர்\r\n*ஆன்மிக சொற்பொழிவாளர்

என் படைப்புகள்
மு குமார் செய்திகள்
மு குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2022 7:17 pm

துணிச்சல்


துணிச்சல்
கொண்டவர்களிடம் பூமிபுத்தாடை வாங்கிக் கொள்கிறது!

துணிச்சல் கொண்டவர்களை கொண்டே
சரித்திரம் தன் காகித பக்கங்களை நிரப்பிக் கொள்கிறது!

துணிச்சல் கொண்டவர்களை கொண்டே
சினிமா கதாநாயகர்களை வடிக்கிறது!

துணிச்சல்
கொண்டு புலிமீது ஏறியவனை ஐயப்பன் என ஆன்மீகம் ஆராதிக்கிறது!

சிங்கத்தின்
மீதுதமர்ந்தவளை ஓம்காரியாக மாற்றுவது துணிச்சல்தான்!

முறம் எடுத்து
புலி விரட்டினாள் மறத்தமிழச்சி என்றாலும் துணிச்சல்தான்!

வேல் படை
குதிரைப் படை கொண்டு வெள்ளையனை எதிர்த்தாள் வேலுநாச்சி என்றாலும் துணிச்சல்தான்!

நாலடி
உயரத்தில் உலகத்தை
நடுங்க வைத்தான் ஹிட்லர் என்றாலும் த

மேலும்

மு குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2022 2:17 pm

இயற்கையின் கோபம்!

வானமே நீ கோபப்படும்
போதுதான் வானத்தில் வானவேடிக்கை (இடி, மின்னல்) நடைபெறுகிறது!

வானம்
கோபத்தில் கொட்டித்தீர்த்த வார்த்தைகள்தான் மழை!

வானமே!
யார்மீது
கோபம்
சுட்டெரிக்கும் சூரியன் மீதா?

அல்லது
உன்நீல ஆடையை ஓட்டையாக்கிய நட்சத்திரங்கள் மீதா?

நிலா மீது
கோபம்
கொள்ளமாட்டாய்?

அவள் உன்
நீளமனதில்
உலாபோகும்
குளிர் ஓடை!

சூரியனாகத்தான் இருக்கும்
உன் நட்சத்திர சேலையை
மங்கச்செய்து
உன் அங்கத்தை வெளியே காட்டியது
அவன் தான்!

வானமே!
சிலநேரம் கோபத்தில் அழுகிறாய் வெள்ளக்காட்டில் பூமி நீச்சல் பழகுகிறது!

வானமே!
சிலநேரம்
கண் மூடி
தூங்கிவி

மேலும்

மு குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2022 12:36 pm

கோபமே!

கோபமே உனக்கு விதை எது?

காரமும் புளிப்புமா? அல்லது
உப்பும் கசப்புமா?

கோபமே உன் உறைவிடம் எது? மனதா? இதயமா?

கோபமே நீ வெளிவரும் வாயில் எது?
வாயா? கண்களா? கரங்களா?

கோபமே நீ
சில இல்லங்களில் கரண்டியையும் மத்தையும் ஆயுதமாக ஏந்துகிறாய்?

கோபமே நீ
மதம் கொண்ட யானை
மரங்களை முறிப்பது போல்
மனங்களை
மரண நகம் கொண்டு கிழிக்கிறாய்!

கோபமே நீ
ஒரு கோழை கோழைத்தனத்தை மறைக்க
குமுறி வெடிக்கிறாய்!

கோபமே! நீ குழந்தை எல்லோரும் உன்னை பார்க்க எக்காளமிடுகிறாய்!

எதிரே இருக்கும் பாத்திரங்களை எத்திவிடுகிறாய்!

தான் தான் சரியென்று எதிர்வாதம் புரிகிறாய்!
ஏற்றுக்கொள்ளாத போது

மேலும்

மு குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2022 1:46 pm

ஏ பணமே!

ஏ பணமே!
நீ இல்லாததால்
பசி பசி என்று பதறுகின்றனர் சிலர்!

ஏ பணமே!
நீ இருந்தும்
புசி,புசி என்று சொல்லாமல் பொட்டியில் வைத்து பூட்டுகின்றனர் சிலர்!

குச்சு வீட்டில் குடியிருக்கமறுக்கும் நீ
மச்சு வீட்டில் மதுரகீதம் பாடுகிறாய்!

உலகத்தின்
உயிரே பணமே! இன்னும் எத்தனை நாளைக்கு சோம்பேறிகளின் வீட்டில் சிறைப்பட போகிறாய்!

உழைக்கும் வர்க்கத்தின் வியர்வை வாசம் பிடிக்க
வெளியே வா!

பணமே
உன்னைப் படைத்தவன் மனிதன்!

அவனையே நீ அடிமைப்படுத்தி விட்டாய்!

நீயே
மனிதனை பாதாளம் வரை
பாய விடுகிறாய்!

நீயே!
மனிதனை பத்தும் செய்ய வைக்கிறாய்!

பணமே நீ
சிலநேரம் பகையை வளர்கி

மேலும்

மு குமார் - சிவநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2016 1:43 am

உயிர் உள்ள சொற்கள்
தேடி உயிர் விட்டுக்
கொண்டிருந்ததொரு
கவிதை

மனவெளியில்
எண்ணச்
சருகுகள்
அங்கங்கே
சிதறிக் கிடைக்க

தனிமைக் கதவின்
தாழ்ப்பாள் திறந்து
நினைவெனும்
தாழ்வாரங்களில்
நிலையில்லாது வழியும்
ஞாபக மழையில்
நனைந்து கொள்கிறேன்.

கனவெனும்
தட்டாம் பூச்சி
சிறகு வழி வானம்
வரை உயர்கிறேன்.

வான் தொடும்
விருட்சங்கள் எழுதி
முடிக்கா கவிதைகளில்
படிக்க மறந்த
சொற்களை காற்றிடம்
கடன் வாங்கிக்கொள்கிறேன்

ஈரப் புற்களில்
இழையும் துளியில்
ஓவ்வோர் சொற்களையும்
கோர்த்துக் கொள்கிறேன்

உயிர்த்துக் கொள்கிறது
ஒவ்வோர் வரிகளும்
கவிதையாய்..

எங்கிருந்தோ

மேலும்

மிக அருமை கவிஞரே 11-Jul-2021 6:28 pm
எதையும் விடுத்துவிட்டு எடுத்துக்காட்டு (மேற்கொள்) இயலவில்லை, அந்த அளவிற்கு அருமையாய் இருக்கு; சிறப்பு. 23-Nov-2017 2:59 pm
அற்புதக் கற்பனை... அதீத அழகுறும் வார்த்தைகள்...வாழ்த்துக்கள் 18-Jan-2017 3:42 am
அருமை 15-Sep-2016 9:13 am
மு குமார் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2017 6:09 pm

வணக்கம்

ஊடகம் ..
இந்த ஊடகம் என்றால் என்ன ?

இன்றைய ஊடகத் துறையின் நிலை தான் என்ன?

பொதுவாக ஊடகத் துறை என்றாலே பலரும் முகம் சுழிக்கக் காரணம் என்ன?

இந்த மீடியாக்களால் தான் இவ்வளவு பிரச்சனை ,விபச்சார மீடியாக்கள்.
இப்படி ஊடகங்களை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் இது யாருடைய தவறு .?

ஊடகத் துறை என்பது நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கு மட்டும் அல்ல
பொறுப்பான துறையும் தான் .

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எதுவென்றாலும் உங்களை
சிரிக்கவோ சிந்திக்கவோ
வைத்த படி தான் நகர்கிறது .
நீங்கள் தான்
சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்து
சிரிக்க வேண்டிய நேரத்தில் சிந்திக்கிறீர்கள் .

மேலும்

மிகத்தெளிவான ஊடகங்களை பற்றியும் ஊடகவியலாளர் படும் பாடுகள் பற்றியும் உண்மைச் செய்திகளை வாசகர்கள் மதிப்பதில்லை என்றும் வெளியிட்டிருந்த ஆதங்கம் புரிகிறது ஏதோ இந்த விளம்பர உலகத்தில் மாயைகளை நம்பி விளம்பரங்களை நம்பி அட்டைப்படத்தை நம்பி படிக்கின்ற வாசகர்களின் மத்தியில் உண்மைகள் எப்போதும் உறங்கி தான் இருக்கின்றன நன்றி 11-Jul-2021 6:25 pm
இன்றைய ஊடகங்கள்... பொறுப்பு உடன் செயல்படுகிறது 25-Apr-2019 10:27 pm
உண்மைதான் கயல்விழி நட்பே. மனிதனின் மூளை இருக்கிறதே, அது சமயத்தில் குழம்பிப் போகும்போது இப்படிப்பட்ட தாறுமாறான எண்ணங்கள் அலட்சிய போக்கு தோன்றத் தான் செய்யும். அனால் ஒன்று இவர்களுக்கு புரிவதில்லை, அதே ஊடகங்கள் அவர்களது அன்றாட தினத்தை நடத்துகின்றன.தங்கள் செய்திகளின் மூலமாக. எதையும் ஆராய்ந்து பார்த்து விட்டுத்தான் கருத்துக் கூற வேண்டும். இந்தக் கடமை ஒவ்வொரு மனிதனின் உரிமைக்கு முன்பிலேயே இருக்கிறது. எங்களுக்கும் சேர்த்து நீங்கள் சாடியதற்கு நன்றி. 19-Sep-2018 10:50 pm
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையான விஷயங்கள் ...ஆனால் இதை இந்த சமூகம் ...ஏற்க மறுக்கிறதே ...போராட்டம் என்ற ஒன்றை தேடி தான் நாம் அனைத்தும் பெற வேண்டிய கட்டாயம் ..இப்பொழுது ....... 26-Jul-2018 12:43 pm
மு குமார் - மு குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2021 7:12 pm

அரசியல்வாதி

அதிகாரத்தினால்
ஆழ்கடல்

ஆள்காட்டி விரல்
நீட்டினால்

யானைமலையும்
தரைமட்டம் ஆகும்

ஆண்டவன் கோவில்களிலும்
இவன் அறிவுரைப்படி
ஆராதனை நடைபெறும்

இவன் வாய் திறந்தால்
வடக்கும் வாய்பொத்தும்

இவனுக்கு தினவெடுத்தால்
தெற்கும் முதுகு சொரியும்

இவன் நடந்தால்
நானிலம் பயிராகும்

இவன் குனிந்தால்
கோட்டையும் தலை கவிழும்

இவன் சுட்டிக்காட்டும்
இடமெல்லாம்
எட்டு வழிசாலையாகும்

எதிர்த்துப் பேசுவோர்
எமன்வாயில் அடைப்படுவர்

இவன்கண் சிவந்தால்
சூரியன்சாம்பல் ஆவான்

இவன் கண்ணசைத்தால்
இளம்பெண்கள் கற்புஇழப்பர்

இவன் உரைக்கு
உச்சநீதிமன்றம் தலைப்பு எழுதும்!

இவன் கருணைக்கு காவல்துறை தவமிருக்கும்

இவன் அணிவான்

மேலும்

அப்படித்தான் அய்யா நடந்துகொள்கிறார்கள் சாமானியர்கள் மறக்கமுடியாத பயங்கரவாதி போல் இருக்கிறார்கள் ஐயா 07-Jul-2021 11:14 am
அரசியல்வாதிகள் அரசுரர் குலத்து தோன்றலோ? 07-Jul-2021 10:19 am
மு குமார் - Krishna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2021 7:15 pm

இருள் சூழ்ந்த பௌர்ணமி!

அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது.

பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு.

மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது.

அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல.

பயணத்தில் மகிழ்ச்சி, புதிதாக செல்லும் பாதையென்பதால் சாலை ஒர காட்சியில் ஓர் ஈர்ப்பு, அலுவலுக வேலை பதற்றமின்றி இருவருக்குமாக

மேலும்

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி! 24-May-2021 11:02 am
நல்ல கதை 23-May-2021 10:41 pm
Please share your feedback. Thank you 18-May-2021 12:59 am
மு குமார் - prakasan அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ? 20-Oct-2022 8:43 pm
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. கண்டு பல உரு நின்று உண்டு உயிர் நிலை வாழ பண்டு தொட்டு இன்று வரை ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. அங்க நிறை நாடி வளரும் பங்கு பாகம் ஒன்றி வரும் இங்கே வாழ உயிர் இணைப்பு தங்கி தசை புரதமும் கூடும். இறை வழிபாடு நம் குறியீடு பறை சாற்றிய அழைப்பு தொடர் உறை உறவு முறை பதிவு மறை அறியும் உணர்வு புலனே. உலக இடம் உலவ படம் வலம் வரும் உயிர் மூச்சு நலம் வாழ நாடும் செயல் பலம் உள்ள சத்து திறனே. அணுகும் வகை உள்ளதே உள்ளம். மண்டும் மண்டலம் மண்டபம் என்றும் உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள் தண்ணீர் பெற்று வளரும் தன்மை. பழகும் தமிழும் மொழியும் பலவும் உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும் மழலை பேசும் மனிதம் யாவும் ஊழ்வினை செய்த உயர்திணை பயனே! 24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும். தொன்று தொட்டு வரும் கருத்தும் தொன்மை பதிவில் எழும் நிலைக்கும் தென் வடம் கிழக்கு மேற்கிலும் பொன் பொருளும் அறத்துடன் சேரும். எழும் கருத்தும் சொல்லில் மலரும் உழும் தொழில் உணவு பொருள் தவழும் மழலையும் பயிலும் அளவே மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும். தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும் ஔவை சொல் செயல்பட வைக்கும் வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும் கம்பன் கவியில் கவிதை வடிக்கும். பேசிப் பழகும் மொழி பேசும் நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும் வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே. நாள் தோறும் தேற்றம் தேறும் வாள் முனையும் வேள்வி முனைப்பும் தோள் தட்டி காட்டும் படம் ஆள் பாதியிலும் ஆளுமை மிகும். 24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். 24-Jul-2022 10:29 am
மேலும்...
கருத்துகள்

மேலே