அரசியல்வாதிகள்

அரசியல்வாதி

அதிகாரத்தினால்
ஆழ்கடல்

ஆள்காட்டி விரல்
நீட்டினால்

யானைமலையும்
தரைமட்டம் ஆகும்

ஆண்டவன் கோவில்களிலும்
இவன் அறிவுரைப்படி
ஆராதனை நடைபெறும்

இவன் வாய் திறந்தால்
வடக்கும் வாய்பொத்தும்

இவனுக்கு தினவெடுத்தால்
தெற்கும் முதுகு சொரியும்

இவன் நடந்தால்
நானிலம் பயிராகும்

இவன் குனிந்தால்
கோட்டையும் தலை கவிழும்

இவன் சுட்டிக்காட்டும்
இடமெல்லாம்
எட்டு வழிசாலையாகும்

எதிர்த்துப் பேசுவோர்
எமன்வாயில் அடைப்படுவர்

இவன்கண் சிவந்தால்
சூரியன்சாம்பல் ஆவான்

இவன் கண்ணசைத்தால்
இளம்பெண்கள் கற்புஇழப்பர்

இவன் உரைக்கு
உச்சநீதிமன்றம் தலைப்பு எழுதும்!

இவன் கருணைக்கு காவல்துறை தவமிருக்கும்

இவன் அணிவான்
வெள்ளை வேட்டி

இவன்பின்னே அணிவகுக்கும்
ஆயிரம்கார்கள் கைநீட்டி

இவன்ஆற்றலின் உச்சம்
இவன்இன்றி ஏதும்நடப்பதில்லை

இவனேமனிதரில் பேராற்றலின்
உச்சபட்சம்!!

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (4-Jul-21, 7:12 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : arasiyalvaathikal
பார்வை : 1896

மேலே