மழை

எந்தக் கடலின் வறட்சியில்
எந்த மேகக் குளிர்ச்சியில்
சொந்தமில்லா நில மகளுக்கு
வெள்ளிக்கொலுசு மாட்டுகிறாய்!

மலைகள் நனைக்கிறாய்!
மரங்கள் துளிர்க்கிறாய்!
அருவிகள் பெருக்கி
ஆறாய்ப் பாய்கிறாய்!

வெள்ளமென்று சொல்லிக்
கொள்ளாமல் - வீதிஉலா
தெருக்கூத்து மேவுகிறாய்!

நிஜமல்ல நீ!
பொய்த்து ஒளிகிறாய்!
பெய்து ஓய்கிறாய்!
பருவகாலம் மாற்றுகிறாய்!
தேவை நீ என்கையில்
துளி வீழாமல்-
பரிதவிக்கவைத்துப் பின்
உதவுவார்ப் போல்
பாசாங்கு செய்கிறாய்!

நிஜமல்ல
மழை என்று
உன் சரிதைச்
சொல்லுகின்றேன்!
நிரூபிப்பதாய் இருந்தால்
பதில் சொல்லிப் போ!
கன மழையாய் அல்ல
கண மழையாய்!

தாய்ப் பால்
வேண்டிடும்
சிசுக்களாய்
உன் தயாளத்திற்குத்
தவிக்கிறது மானுடம்!
ஆயுள் முழுதும்
தவமிருக்க நாங்கள்
தயார்!

ஆண்டிற்கு ஒரு
முறையாகிலும் பெய்து
மகிழ்விக்க நீ......!

எழுதியவர் : சஜா (18-Nov-17, 8:33 pm)
சேர்த்தது : சஜா
பார்வை : 188

மேலே