நாளைய விவசாயிகளுக்கு

#நாளைய_விவசாயிகளுக்கு
சொத்து சுகம் சேத்து சேத்து சோத்துக்கு என்ன பண்ண போற - பெத்து போடும் பேரப்பிள்ளைக்கு பேப்பர தானா ஊட்ட போற ......!
எத்தனை உயிரோட்டமுள்ள வயக்காட்ட வித்து புட்டு - அத்தனையும் வீடியோ கேமில் தானா
வீட்டுக்குள்ள பூட்டி வச்சி காட்ட போர ......!
நகர்ப்புற நாற்றம் வந்து கிராமத்தில் சுத்தத்த பத்தி பேசுதடா - ஒன் வீட்டு கக்குஸ் வாட கடல் கடந்தும் வீசுதடா ......!
சுவாசிக்கும் காத்துல மாசு கண்ணில் கிடந்து உருத்த - நாகரீகமா வாழுர ஒங்கல எங்க கொண்டு நிறுத்த .....!
தொலைபேசி கணினியெல்லாம் நரகவாசி படைப்பு - திருப்தியில்ல வாங்குர நிதம் புதுசு புதுசா புலம்பி .....!
ஏழை விவசாயின்னு வாய் கூசாம செய்தி வாசிக்குர - தலைமுறைக்கும் திங்குர சக்தியே வசதி மூளையிருந்தா யோசிக்குர ......!
இருபது வருசமாச்சு எங்குருக்குள்ள மோட்டார் புதுவரவு - இன்னைக்கு நிலத்துக்கடியில் நீரு ரொம்ப கொறவு....!
கரண்டு இல்லா காலம் இருண்ட காலம்னா நெனச்ச - தெருக்கூத்து கலைஞர்களை அடையாளமில்லாம அழிச்ச ..... !
புத்தி கெட்ட மக்கள்தானு வியாபாரம் செய்ய நுழைஞ்ச - கத்தி குத்தி இரத்தம் கொட்டும் கூட்டத்தோட தொலஞ்ச.....!
இத்து போன ஒடம்புக்குள்ள - எலும்புகூட
இரும்பு - செத்து போவ பொத்திகிட்டு மெசின தூக்கிட்டு கெளம்பு .....!
மழை தண்ணி வேண்டி தாங்க - அய்யனார்
ஆலயத்தில் ஆடு வெட்டி ஆட்டம் பாட்டம் போட்டிடுவோம் ......!
நாளை எங்க பூமிய காக்க - சாமி
நரபலி கேட்டா கூட கொடுக்க நாங்க ஏன்னு எதும் கேக்க மாட்டோம் .......!
சுதாகர் செல்லா

எழுதியவர் : சுதாகர் செல்லா (18-Nov-17, 5:44 pm)
பார்வை : 217

மேலே