சுதாகர் செல்லா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுதாகர் செல்லா |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : 21-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 6 |
இயற்கை தாயின் இளைய மகன்
பிரம்மனின் திறமைக்கு
சான்று நீயென வாதிடவா - ஊரார்
பிரமிக்க பேரழகேயுன்னை
கண்டு கவிதை பாடிடவா .....!
தபலோகத்தில் பிறந்து
தரையில் வளர்ந்த தேவதையே - என்
இளமை இருளை
இன்றே போக்கு தாரகையே ......!
கண்ணா இரண்டும்
கருணையில்லா கணைகளடி
புண்ணான நெஞ்சம்
புலம்புமுந்தன் நினைவிலடி .....!
மலையில் மறையும் பொன்
மாலை சூரியன் சாயலடி - உன்
தலைமுடியின் தங்க நிறத்தில்
தெரியும் முகமோ தோயமடி .....!
உலக எழிலெல்லாம் பார்த்த
உள்ளம் கொள்ளை போனதடி
அழகின் நிழலும் நிரந்தர
அடையாள சின்னம் ஆனதடி ......!
உன் சுவாசக் காற்று என்னை
தீண்டும் போதிலெல்லாம்
என் மீசை முளைத்த நாட்கள்
மீண்டும
அந்தப் பார்வையின்
அந்தரங்க ஆழத்தில்
இருந்தவை எல்லாம்
சற்றும் சமகாலத்தோடு
தொடர்பில்லாத
முற்றிலும் மாறுபட்டவையே ......!
பரிதியிளங்கதிர் குளிர்ச்சி
பரவியிருந்த இருளில்
பொன்னால் வேயப்பட்ட
பொதுமக்கள் வாழும் கூரைகளில்
விழுந்தெழுந்த நிலவொளி
வீதியெங்கும் வெளிர்மஞ்சள் நிறத்தில்
வீசி கொண்டிருந்தது ...... !
நிற இன மத பேதமின்றி
நிரம்பியிருந்த மக்கள் முகத்தில்
பூரணமாக பூத்திருந்த புன்னகை
பார்த்ததுமே புரிந்தது
அரசியல் அதிகார அடிப்படை
அறிவு குறித்து யாரும்
யோசித்திருக்கவில்லை ......!
கணவன் மனைவியாக
கைகோர்த்து வந்தவர்கள்
அந்நியர்கள் அழகை
ஆராயாமல் இருப்பதற்கு
கா
இந்த ஆழ்ந்த
இறந்த கால உறக்கத்திலிருந்து
உயிர்ப்புடன் எழப்போவதாய்
உள்ளுணர்வு ஒலித்து
கொண்டிருக்கிறது .......!
எந்த நேரத்திலும்
சம்பவிக்கவிருக்கும் நம்
சந்திப்பிற்கு
இன்னும் என்ன தயக்கம்
என்மேல் நம்பிக்கை
வரவில்லையா ........!
கடந்து போன
கோடை வறட்சியை
தாக்குப்பிடிக்க
கண்களே பேருதவி புரிந்ததால்
ஆனந்த கண்ணீர்
வரவில்லையென்பதற்காக
ஒருபோதும் என் காதலை
களங்கப்படுத்தி விடாதே .......!
பொந்துக்குள்ளே
பதுங்கி இருந்து
பிரபஞ்சத்தை ஆராய்ந்த
பைத்தியக்கார நண்டு நான்
நீந்துவதை மறந்து
கரையிலே அமர்ந்து கடலை
வேடிக்கை பார்க்க ஆரம்பித்து
நெடுநாட்கள் ஆகிவிட்டது .......
கண்மணியே உன்
காலணிகளை
கழற்றியெறிந்து விட்டு
காலடியெடுத்து வை .....!
இளங்காலை சூரியனின்
இயல்பு திரியாத
பேரன்பு பிரகாசிக்க .....!
புல்வெளியில்
கொட்டிக் கிடக்கும்
வைரக் குவியல்கள் வீசும்
பட்டொளி பரவுவதை உன்
பாதங்கள் ஸ்பரிஷிக்கட்டும் ......!
கொலுசுகளை கொஞ்சம்
குரல் அமர்த்து
பருத்தி செடிகள் மேல்
புதிதாக பூத்த பூக்களோடு
புணர்ந்து கொண்டிருக்கும்
பட்டாம்பூச்சுகளின்
கலவி இன்பம்
கலையக்கூடும் .......!
மல்லிகை மலர்வனத்தில்
முட்டி மோதி விளையாடும்
முயல்களை போல்
துள்ளி குதித்து களிப்புறுவோம் ......!
தென்னை இளநீர் குடித்து
நெல்லிக்காய் கடித்து
பல் கூச்சத்தோ
நாங்கள் சபிக்கப்பட்டவர்கள்
பெற்றவள் அரவணைப்புக்கு ஏங்கும் எங்களை மார்பில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து தொட்டிலில் கிடத்தி தாலாட்டி நிம்மதியாக தூங்குகிறானென்று நினைத்து இன்னொரு குழந்தைக்கு பாலூட்டிய படியே பார்த்து மகிழ்வீர்கள் .......!
பச்சாதாபம் பார்க்காமல் எங்கள் மழலை பருவத்தை அடிதடி வன்முறைகள் நிரப்பி பாழாக்குவீர்கள் .......!
வெறும் தோலும் சதையுமல்ல பெண்களென்று போராடும் போதும் எங்கள் வெளித் தோற்றத்தை விரும்பி விமர்சிப்பீர்கள் ......!
காதலில் தவித்து காமத்தை சுவைத்தால் தான்
தாம்பத்யம் தழைக்குமென்போம் வாத்சாயனர் வாரிசென வாய்விட்டு கேலி சிரிப்பீர்கள் .......!
பசிக்கு பலியாகும் விலங்குகளுக்காக வருத்தம் கோரவில்லை பேராசை பூதம் விழுங்கி ஏப்பம் விட்டு காணாமல் போகும் இனங்களுக்காக அழுது புலம்புகின்றோம் .......!
செயற்கை வேலையை சுலபமாக்கும் இயற்கையே வாழ்வை வளமாக்கும் என கூவும் போது சம்பாதிக்க துப்பில்லாதவன் பேச்சிலென்ன லாபமென கேட்க மறுப்பீர்கள் .......!
உணர்வுகளை உங்களுக்கு கடத்த மொழியில்லாமல் மௌனித்து விடும் எங்களை ஏதுமறியா ஏமாளியென ஏளனம் செய்வீர்கள் .......!
முரண்பாடான சமூகத்தில் முறையாக வாழ முடியாமல் புறக்கணிக்க முயன்றால் தற்கொலை பண்ணி கொள்பவன் கோழை வாழ வழி தெரியாதவனென்று வசை பாடுவீர்கள் .......!
மெய்யன்பு நேசம் நாடும் எங்களை தான் சில பெண்கள் (ஆண்களோ) ஆறுதல் அளிப்பது போல் பேசி ஆதாயம் தேடிக் கொண்டு நிரந்தர பிணமாக உங்கள் நினைவுகளோடு தனிமையில் நாறவிடுவீர்கள் ........!
பிறப்பிலிருந்து இறப்பு வரை எங்களோடு நிலையாக நீடிப்பது எங்களை பீடித்த நிறைவேறாத ஏக்கங்களே .......!
சுதாகர் செல்லா