கண்மணியே
கண்மணியே உன்
காலணிகளை
கழற்றியெறிந்து விட்டு
காலடியெடுத்து வை .....!
இளங்காலை சூரியனின்
இயல்பு திரியாத
பேரன்பு பிரகாசிக்க .....!
புல்வெளியில்
கொட்டிக் கிடக்கும்
வைரக் குவியல்கள் வீசும்
பட்டொளி பரவுவதை உன்
பாதங்கள் ஸ்பரிஷிக்கட்டும் ......!
கொலுசுகளை கொஞ்சம்
குரல் அமர்த்து
பருத்தி செடிகள் மேல்
புதிதாக பூத்த பூக்களோடு
புணர்ந்து கொண்டிருக்கும்
பட்டாம்பூச்சுகளின்
கலவி இன்பம்
கலையக்கூடும் .......!
மல்லிகை மலர்வனத்தில்
முட்டி மோதி விளையாடும்
முயல்களை போல்
துள்ளி குதித்து களிப்புறுவோம் ......!
தென்னை இளநீர் குடித்து
நெல்லிக்காய் கடித்து
பல் கூச்சத்தோடு
பலநூறு முத்தங்களை
பகிர்ந்து கொள்வோம் .......!
மைனாக்கள் சத்தம் கேட்டு
மயக்கம் தெளிந்திடாதே
பாம்பாக நமையெண்ணி
பயந்திருக்கும் .......!
இன்னொரு நாள் கிடைக்காதாயென்ற
ஏக்கம் தீர்ந்திடவே
இன்றே இங்கிருந்து
மகிழ்ந்து செல்வோம் ........!