என்னோடு வா
இந்த ஆழ்ந்த
இறந்த கால உறக்கத்திலிருந்து
உயிர்ப்புடன் எழப்போவதாய்
உள்ளுணர்வு ஒலித்து
கொண்டிருக்கிறது .......!
எந்த நேரத்திலும்
சம்பவிக்கவிருக்கும் நம்
சந்திப்பிற்கு
இன்னும் என்ன தயக்கம்
என்மேல் நம்பிக்கை
வரவில்லையா ........!
கடந்து போன
கோடை வறட்சியை
தாக்குப்பிடிக்க
கண்களே பேருதவி புரிந்ததால்
ஆனந்த கண்ணீர்
வரவில்லையென்பதற்காக
ஒருபோதும் என் காதலை
களங்கப்படுத்தி விடாதே .......!
பொந்துக்குள்ளே
பதுங்கி இருந்து
பிரபஞ்சத்தை ஆராய்ந்த
பைத்தியக்கார நண்டு நான்
நீந்துவதை மறந்து
கரையிலே அமர்ந்து கடலை
வேடிக்கை பார்க்க ஆரம்பித்து
நெடுநாட்கள் ஆகிவிட்டது .......!
பரந்து விரிந்த
பெருங்கடலுக்குள்
நிரந்தர உறவாக
அருகில் நீ நீந்த
சுற்றி உலாவரும்
மிச்ச வாழ்நாட்களுக்காக
காத்து கொணடிருக்கிறேன் ......!
எக்கச்சக்க
இயற்கை வளங்களை தன்னுள்
தக்க வைத்துள்ள
நீலக் கடல் முழுவதும்
நீந்தி அரிய முத்து பவளம் முதலிய
தந்து இன்ப பரவசமூட்டி
மகிழ்ச்சியில் திளைக்கும் உன்
முக அழகைக் கண்டு ரசிக்க உயிர்
மூச்சை பிடித்து வைத்துள்ளேன் .....!
நீக்கமற திறந்திருக்கும்
நீண்ட வான்வெளியில்
நிறைந்திருக்கும் நட்சத்திரங்களை
மிதந்து திரியும் வெண்ணிலவொளியில்
மனம் நிறைய கணக்கெடுப்போம் வா .....!