காதல் வலி
காதலின் தத்துவம்
கடல்போல் ஆழமானது
கூடி வாழ்ந்திட
இன்பம் நல்கிடும் காதல்
பிரிவில் தந்திடும்
வலிகள் அத்தனையும்
வலியென்றாலும் அது
இன்பமான துன்பமானதே
இன்பத்தில் ஆழ்த்தியதல்லவா
கூடி இருக்கையிலே -வெற்றியே
எப்போதும் என்று வாழ்ந்தால்
தோல்வி என்பது தெரியாது
தோல்வி யாது என்றறிந்தால் தானே
வெற்றியின் தன்மை புரியும்
அதனால்தான் இறைவன்
இன்பம் தந்து காதலுக்கு
பிரிவில் துன்பமும் தந்தானோ
அதுவே காதல் வலி ..................
மறக்கமுடியா வலி
வாழ்வின் முடிவு வரை
தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் !