பேரழகியாய் ஒருவள் வேண்டாம்
பேரழகியாய்
ஒருவள் வேண்டாம்
எப்போதும் எனக்கு மட்டும் ஓர் அழகியாய் நீ வேண்டும்,
வரும் போது வரதட்சணை கொண்டு வர வேண்டாம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளில் என்னோடு
கை கோரு அது போதும்!!
அருகில் இருக்கும் போது அழைத்து பேசும்
அவள் வேண்டாம்,
தொலைவில் நான் இருக்கும் போது நினைவில் வைத்து ஒரு குருஞ்சசெய்தி அனுப்பும்
அவள் போதும்!!
என் வருகைகாக சாப்பிடாமல் வாசலில் காத்திருக்கும்
அவள் வேண்டாம் ,
பார்சலில் நான் சாப்பிடாமல் பார்த்து கொண்டால்
அது போதும் !!
பொருத்தம் பொருந்திய உடன் வாலிப வருத்தம் நீங்கியதென கணவன் காலில் விழும் காலம் கடந்த பெண்ணாய் தேடவில்வலை ,
என் தோளில் அவள் கை வைக்கும் போது என் பொருப்புகள் உணர்தும் ஒருத்தியை தவிர வேறு எதுவும் என் தேடல் இல்லை !!
மனைவி எனும் இடத்தை மட்டும் நிரப்பிட வர வேண்டாம்
எவளும் வாழ்க்கை துணையாய் ,
உன் இடத்தை வாழ்கையில் எவராலும் நிரப்பிட முடியாது எனும்போது நிரம்பிட வேண்டும் அவளால்
என் மனைவி எனும் ஸ்தானம் !!
இனணயப் பயன்பாடு நிறைய வந்ததால் இணையும் இதயங்கள் எல்லாம் இப்போது
பிரிதலில் முடிகிறதாம்,
இதோ என் ஆசை வாழ்க்கை இந்த இறுதி வரிகளின்
புரிதலில் முடியட்டும் ,
என் கோபம் வரும் போதெல்லாம் "நீ தாழ்ந்து போக வேண்டும் "
உன் தேவைகள் பூர்த்தி செய்தே "நான் வாழ்ந்து சாக வேண்டும்"!!!