கம்பன் ஏமாந்தான்

பிரம்மனின் திறமைக்கு
சான்று நீயென வாதிடவா - ஊரார்
பிரமிக்க பேரழகேயுன்னை
கண்டு கவிதை பாடிடவா .....!

தபலோகத்தில் பிறந்து
தரையில் வளர்ந்த தேவதையே - என்
இளமை இருளை
இன்றே போக்கு தாரகையே ......!

கண்ணா இரண்டும்
கருணையில்லா கணைகளடி
புண்ணான நெஞ்சம்
புலம்புமுந்தன் நினைவிலடி .....!

மலையில் மறையும் பொன்
மாலை சூரியன் சாயலடி - உன்
தலைமுடியின் தங்க நிறத்தில்
தெரியும் முகமோ தோயமடி .....!

உலக எழிலெல்லாம் பார்த்த
உள்ளம் கொள்ளை போனதடி
அழகின் நிழலும் நிரந்தர
அடையாள சின்னம் ஆனதடி ......!

உன் சுவாசக் காற்று என்னை
தீண்டும் போதிலெல்லாம்
என் மீசை முளைத்த நாட்கள்
மீண்டும் வந்து போகுதடி .....!

புருவங்கள் உயர்த்தி
பொய்யாய் முறைத்தால் போதுமடி - எந்த
வீரனும் விழுந்து
வணங்கும் தாமரை பாதமடி ......!

காதணியாய் காலமும்
காதலி பேச்சை கேட்பேனே
அமுதென வார்த்தைகள்
அனுதினம் சொச்சம் ஈவாயா ......!

நீ நடந்த திசையில்
நிலத்தில் ஏதும் சுவடில்லை
என்னை கடந்த தென்றல்
இன்னும் ஏனோ வரவில்லை .....!

இருபது வருட
சாபம் நீங்க போரிடவா-நான்
சபதம் போட்டு
சேர ஏங்கும் காரிகையே .......!

பூத்து குலுங்கிய
புத்தம் புது ரோஜாவே - உன்
முத்தம் விழுந்தால்
நித்தம் நானும் ராஜாவே .......!

எழுதியவர் : சுதாகர் செல்லா (24-Nov-17, 4:34 pm)
பார்வை : 101

மேலே