புகழ்விழி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : புகழ்விழி |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 10-Apr-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 1389 |
புள்ளி | : 165 |
விண்ணைப் படைத்து விண்ணிலே விண்மீன்களை மிதக்கவிட்டு மண்ணைப் படைத்து மண்ணிலே மனிதனை உலவவிட்ட ஏக இறைவனுக்கே புகழனைத்தும் !
நான்....................உலகின் பார்வையில் அதீத பேச்சாற்றல் மிக்கவள்
உற்றார் பார்வையில் ஏதும் அறியா பேதை
பெற்றோர் பார்வையில் எதற்கும் அஞ்சாத வீரமகள்
ஆனால் என் மனதின் பார்வையில்rnவிரும்பியதை செய்து முடிக்க வேண்டும்
என் பெற்றோர் நினைத்ததை உடனே செய்து முடித்தல் வேண்டும் அது என் விருப்பத்திற்கு மாறானதாக இருந்தாலும் சரி.
பெற்றோரின் கனவு நான்rnமருத்துவம் படிப்பது........
ஆனால் விதி வித்திட்டதுrnபொறியியல்rnrnபொறியாளர் ஆனாலும் நாட்டிற்கு சேவை அளிப்பதே கனவு.
மாவட்ட ஆட்சியராய் கடமையாற்றுவதே இலட்சியம்.
காலம் முழுதும் எழுத்தாளராய் இருப்பது ஆசை.
என் பேச்சும் எண்ணமும் எழுத்தும் வையத்தைமுன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் என்பது நம்பிக்கை.
மொத்தத்தில் நான் இயற்கையின் ரசிகை....,...........தமிழ் மொழியின் காதலி............
காயப்பட்ட இதயத்திற்க்கு
பேனா எழுதிய மருந்து
#கவிதை
பறிக்கப்பட்ட கனவுகளும்
களவாடப்பட்ட நேசத்தின் தடயங்களும்
தூது அனுப்புகிறது......
தொலைக்கப்பட்ட முகவரிக்கு !!
கூட்டை விட்டு பறந்து செல்கின்றோம்...
கூடி வாழ்ந்த வீட்டை விட்டு பறந்து செல்கின்றோம்...
கடைசி நிமிடம் வரை கதைத்துக் கொண்டிருந்தோம்...
கண்ணீர் துளி சிந்திடாமல் கதைத்துக் கொண்டிருந்தோம்...
பாடி பறக்கும் பறவை கூட்டம் போல்
பழகி களித்தோம் தோழர்களே....
அடுத்த நொடியின் பயம் அறியாமல்
அழகியல் வாழ்வு வாழ்ந்து வந்தோம்...
இனி எங்கு காணப்போகிறோம்...
இனிமையான நினைவுகளை எப்போது பகிர போகிறோம்..
வாதங்கள் நூறு..
விவாதங்கள் நூறு...
சிறு பொழுதில் மறந்து விட்டு
சிறுபிள்ளை சிரிப்பது போல்
சிரித்துக்கொண்டோமே..
சிறகடித்து திரிந்து வந்தோமே...
பிரிவு எண்ணும் வார்த்தையின் பொருள்
பிரிவை தொட்ட
கூட்டை விட்டு பறந்து செல்கின்றோம்...
கூடி வாழ்ந்த வீட்டை விட்டு பறந்து செல்கின்றோம்...
கடைசி நிமிடம் வரை கதைத்துக் கொண்டிருந்தோம்...
கண்ணீர் துளி சிந்திடாமல் கதைத்துக் கொண்டிருந்தோம்...
பாடி பறக்கும் பறவை கூட்டம் போல்
பழகி களித்தோம் தோழர்களே....
அடுத்த நொடியின் பயம் அறியாமல்
அழகியல் வாழ்வு வாழ்ந்து வந்தோம்...
இனி எங்கு காணப்போகிறோம்...
இனிமையான நினைவுகளை எப்போது பகிர போகிறோம்..
வாதங்கள் நூறு..
விவாதங்கள் நூறு...
சிறு பொழுதில் மறந்து விட்டு
சிறுபிள்ளை சிரிப்பது போல்
சிரித்துக்கொண்டோமே..
சிறகடித்து திரிந்து வந்தோமே...
பிரிவு எண்ணும் வார்த்தையின் பொருள்
பிரிவை தொட்ட
உன்னை எழுத ஆசை தான்
உனக்கான வார்த்தைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன் !
தென்றலே என்றெழுதவா.....
வண்ண நிலவே !
வானம்பாடி என்றழைக்கவா......
முத்துச் சரமே !
முல்லைக் கொடியே !
கார் முகிலே !!
கரு விழியாலே !!
செத்து பிழைத்தேன்
செயலற்று போனேன் என்று சொல்லவா....
வெள்ளி நிலவே !!
வெண் தாமரையே !!
வல்லினம் நீ......
மெல்லினம் நீ......
என இடையிடையே
புனையவா......
பட்டு பூவே !!
பவளத் திட்டே !!
உயிரெழுத்து நீ.....
மெய்யெழுத்து நான்.......
உயிர்மெய் எழுத்து நாம் என்று பிதற்றவா...
குங்கும இதழின்
குறு நகையாளே !!
அன்பே.....
அழகே......
அன்னமே.......
ஆருயிரே......
எதை தொட
நாணத்தின் மிகுதியால்
என் பேனாவின்
மைக்கூட வெளிவர
மறுக்கிறது........
உன் பெயரை
எழுதுவதால் என்னவோ.....!
நான் ஒன்றுக்கும் பேராசை
கொள்ளவில்லை...
என் ஆசை கூட
கானல் நீர் ஆவதினால்...
திங்கள் போல் உன் முகம்
ஞாயிறு போல் புன்னகை
பூக்கள் போல் மேன்மை
மொழி யில்லாக் கவிதை
கண்கள் மூடும் தென்றல்
முத்தம் திருடும் சத்தம்
இதயம் வரைந்த ஓவியம்
இறைவி புகழும் காவியம்
முன்பனி சிந்தும் மார்கழி
ஒளியில் நீந்தும் புல்வெளி
கருவில் பிறந்த தேவதை
மார்பில் ஊரும் ஆருயிர்
இன்பம் எழுதும் புத்தகம்
துன்பம் மறைந்த நூலகம்
அழுகை உந்தன் சங்கீதம்
துயிலும் எந்தன் வானவில்
வேதம் சொன்ன புனிதம்
மனிதம் நிறைந்த மனிதன்
அன்பில் புகுந்த என்னை
மரணம் மீட்கும் எல்லை
அன்னை போல் பிறந்தாய்
தொட்டில் வாங்க நான்
நதிகள் போல் ஓடினேன்
உயிரில் ஏதோ செய்தாய்
தாலாட்டுப் பாட நான்
ஆனந
உரிமை யுத்தம்
உலகம் எங்கும்
குப்பை போல
சடலம் குவியும்
முள்ளின் மேலே
பூக்கள் பூக்கும்
மூச்சின் ஓய்வில்
தேகம் தகனம்
சிலுவை ஏந்தும்
அகதிப் பறவை
கழிவின் நதியில்
உதிரம் சிந்தும்
மின்னல் கீற்று
பசுமை வேரில்
அஹிம்சை கற்று
நிம்மதி தேடும்
பாலை நிலா
வறுமை முகம்
ஊமைப் பேனா
சிலுவைக் கூடு
வானம் சிதறி
நதியில் ஓடும்
வானவில் கூட
கர்ப்பமாகும்
இருளும் பகலும்
விதியின் பக்கம்
பனியும் முகிலும்
நதியின் ஏக்கம்
விழிநீர் ஊற்றி
மதியும் பயணம்
மெய்கள் இன்று
ஒளிந்த துன்பம்
பட்டாம் பூச்சி
குடம்பி உள்ளே
நச்சுப் பாம்பு
காவல் தேடும்
சிகப்
வந்தாரை வாழ
வைக்கும் மண்ணடா !
வசந்தம் பொங்கும்
வசுந்தரை காண்ணடா !
மன்னாதி மன்னனும்
மண்டியிடும் மண்ணடா !
மகிமை கொண்ட
மண்ணெல்லாம் பொன்னடா !
நீ......................
இதை அறியாத
இழுதை மடையனடா !
வாசமுள்ள மண்ணின்
வாசமறியா வஞ்சகனடா !
எங்கள்...........
ஏராளனுக்கு நண்பன்
ஏறு தானடா !
ஏழ்மையிலும் உழவனுக்கு
ஏறுதான் துணைவனடா !
அந்த...................
துணைவனும் களிப்பில்
துள்ளிகுதிக்கும் மண்ணடா !
தடையை தகர்த்தெறியும்
துணிச்சலுள்ள மண்ணடா !
வஞ்சிப்போரை விரட்டியடிக்கும்
வீர மண்ணடா !
ஒன்றே குலமென
ஒன்றி வாழும்
நாடு என
நகர் எங்கும்
கூவலிட்ட நாட்டிலே
காக்கை கூட்டம்போல்
கூடி வாழ்ந்த - எங்கள்
கூட்டுக்குள் பயங்கர
கயவர் போல்
கூட்டைக் களைக்க
வந்த ஆரியர்களே......... !
பாட்டன் முப்பாட்டன்
காலம் முதல்
பாரம்பரியத்ததை எங்கள்
நெஞ்சில் உரம்
போட்டு வளர்த்த
எறுழ்வலி மிக்க
ஏறு தழுவலை
எங்களிடம் இருந்து
பறிக்க நினைத்தவனே............!
சாணக்கியம் கொண்டு
சட்டங்கள் இயற்றி
சாசனம் இட்டாலும்
சாதூரியமாய் எங்களை
சிறைப் பிடித்தாலும்
சமுத்திரம் போல்
சங்கமமாகி இருக்கும் - நாங்கள்
சாதுயர் அடைந்தாலும்
சல்லிக்கட்டு நடப்பதை
சாத்தியம் ஆக்காமல்
சாய மாட்டோம்.............!