கவி நள்

உன்னை எழுத ஆசை தான்
உனக்கான வார்த்தைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன் !

தென்றலே என்றெழுதவா.....
வண்ண நிலவே !
வானம்பாடி என்றழைக்கவா......

முத்துச் சரமே !
முல்லைக் கொடியே !
கார் முகிலே !!

கரு விழியாலே !!
செத்து பிழைத்தேன்
செயலற்று போனேன் என்று சொல்லவா....

வெள்ளி நிலவே !!
வெண் தாமரையே !!
வல்லினம் நீ......
மெல்லினம் நீ......
என இடையிடையே
புனையவா......

பட்டு பூவே !!
பவளத் திட்டே !!
உயிரெழுத்து நீ.....
மெய்யெழுத்து நான்.......
உயிர்மெய் எழுத்து நாம் என்று பிதற்றவா...

குங்கும இதழின்
குறு நகையாளே !!

அன்பே.....
அழகே......
அன்னமே.......
ஆருயிரே......
எதை தொட்டு
எழுத நான் !

உன்னை எழுத
எனக்கு சுலபமாக இருக்கவில்லை......
ஒவ்வொரு சொல்லையும்
ஓய்வில்லாமல் புரட்டிப்பார்க்கிறேன்.......

எங்கேனும்
ஏதோ ஒரு வகையில்
மற்றொரு கவிஞனால்
முத்தமிடப்பட்ட சொற்களே !!

பொய்மையற்ற
புன்னகையாளே......
கவிப்பாட எண்ணுகிறேன்
கவி நள் -ளே !!!

எழுதியவர் : புகழ்விழி (5-Jan-18, 8:47 pm)
பார்வை : 155

மேலே