நீலக்குருதி --முஹம்மத் ஸர்பான்

உரிமை யுத்தம்
உலகம் எங்கும்
குப்பை போல
சடலம் குவியும்

முள்ளின் மேலே
பூக்கள் பூக்கும்
மூச்சின் ஓய்வில்
தேகம் தகனம்

சிலுவை ஏந்தும்
அகதிப் பறவை
கழிவின் நதியில்
உதிரம் சிந்தும்

மின்னல் கீற்று
பசுமை வேரில்
அஹிம்சை கற்று
நிம்மதி தேடும்

பாலை நிலா
வறுமை முகம்
ஊமைப் பேனா
சிலுவைக் கூடு

வானம் சிதறி
நதியில் ஓடும்
வானவில் கூட
கர்ப்பமாகும்

இருளும் பகலும்
விதியின் பக்கம்
பனியும் முகிலும்
நதியின் ஏக்கம்

விழிநீர் ஊற்றி
மதியும் பயணம்
மெய்கள் இன்று
ஒளிந்த துன்பம்

பட்டாம் பூச்சி
குடம்பி உள்ளே
நச்சுப் பாம்பு
காவல் தேடும்

சிகப்பு உதிரம்
மண்ணில் சிந்து
நீல மையால்
உலகை திருத்து

ஆயுதம் கண்டு
அஞ்சும் இதயம்
நீலக் குருதியை
வாளாய் எடு...!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-Mar-17, 9:09 am)
பார்வை : 141

மேலே