நிலா விடு தூது
கவிதை
நிலா விடு தூது !
அவள்
காதல்விழிகள் பட்டு
மலர் மொட்டுக்களே
மணமுடன் மலரும்போது
அவன்
இதயம் காதலில்
மலராமல் இருக்குமா ?
அவள் காதலன்
அந்தரங்கமான காதலை
கவிதைகளாக
அவள்
இதயத்தில் செதுக்க
காத்துக் கொண்டிருந்தான் !
அவன் இனிய காதலி
அவனை மறுத்த
அந்தக்கொடிய நாளை
மதுக்கோப்பைகளில்
மயங்கி விழாமல்
கரைக்க நினைக்காமல்
அவள்
காதலன்
வானில் முகம்காட்டும்
முழு நிலாவிடம்
மறக்க முடியாத காதலை
காதல் கவிதைகளாக
புலம்பித் தீர்த்தான் !
அவன் புலம்பல்
காதலிக்கு காதில்
விழவில்லையானால்
அவன்
தூது விட்ட
முழுநிலாவிடம்
அவன் இனிய காதலி
கேட்டுப் பார்க்கட்டும்!
அவள்
காதலனை
என்றாவது ஒருநாள்
நிலாவும் தூது சென்று
அடையாளம் காட்டும்
காதல் கவிதைகளாக
அவன் காதலியிடம்
அவனை அறிமுகப்படுத்தும் !
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை