வீர மண்

வந்தாரை வாழ
வைக்கும் மண்ணடா !

வசந்தம் பொங்கும்
வசுந்தரை காண்ணடா !

மன்னாதி மன்னனும்
மண்டியிடும் மண்ணடா !

மகிமை கொண்ட
மண்ணெல்லாம் பொன்னடா !

நீ......................

இதை அறியாத
இழுதை மடையனடா !

வாசமுள்ள மண்ணின்
வாசமறியா வஞ்சகனடா !

எங்கள்...........

ஏராளனுக்கு நண்பன்
ஏறு தானடா !

ஏழ்மையிலும் உழவனுக்கு
ஏறுதான் துணைவனடா !

அந்த...................

துணைவனும் களிப்பில்
துள்ளிகுதிக்கும் மண்ணடா !

தடையை தகர்த்தெறியும்
துணிச்சலுள்ள மண்ணடா !

வஞ்சிப்போரை விரட்டியடிக்கும்
வீர மண்ணடா !

எழுதியவர் : புகழ்விழி (19-Jan-17, 4:30 pm)
பார்வை : 131

மேலே