எழுந்திரு தோழா
எழுந்திரு தோழா உறங்குதல் போதும்
வெளியில் வாடா என்தமிழ் தோழா
யாரவன் நமக்கு தடைகள் போட
எமது பண்பாடு அதுஎம் உரிமை
எருதினை தழுவ யாரிடம் கேள்வி
இளைஞர்கள் எழுச்சி இதுதான் புரட்சி
இனி நமக்கில்லை யாதொரு தொல்லை
எழுந்திரு தோழா உறங்குதல் போதும்