கலியபெருமாள் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கலியபெருமாள் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 295 |
புள்ளி | : 24 |
வோட்டை விற்பாராம் பின்னர்
ஒப்பாரி வைப்பாராம் ஆனாலும்
இவர் நல்லவராம்... அரசியல்வாதி
எல்லாம் அயோக்கியராம்
கொள்ளை அடித்ததைத் தான்
கொஞ்சம் தருகின்றான்
உன்னை அடிமை ஆக்கத்தான்
இது அட்சாரம் என்கின்றான்
ஆனாலும் நீயோ...
வந்தது லாபம் என்கிறாய்
இது யார்வீட்டுப் பணம் என்கிறாய்
நீ செய்யும் தவறு தெரியாமலே
செத்து மடிகின்றாய்
கற்பை விற்றுவிட்டு பின்
கற்பளிப்பு கூப்பாடு ஏன்?
வாக்குக்கு நீ வாங்கியதே
உன் வாய்க்கு அரிசியாக மாறியதோ
வீட்டுக் காவலுக்கு திருடனை வைப்பாராம்
பின்னர் கொள்ளை போய்விட கூப்பாடு போடுவாராம்
ஆனாலும் இவர் நல்லவராம்
அரசியல்வாதி எல்லாம் அயோக்கியராம்
வோட்டுக்கு நோட்டு இனி
ஒழியட்டும் இவ்விளையாட
வோட்டை விற்பாராம் பின்னர்
ஒப்பாரி வைப்பாராம் ஆனாலும்
இவர் நல்லவராம்... அரசியல்வாதி
எல்லாம் அயோக்கியராம்
கொள்ளை அடித்ததைத் தான்
கொஞ்சம் தருகின்றான்
உன்னை அடிமை ஆக்கத்தான்
இது அட்சாரம் என்கின்றான்
ஆனாலும் நீயோ...
வந்தது லாபம் என்கிறாய்
இது யார்வீட்டுப் பணம் என்கிறாய்
நீ செய்யும் தவறு தெரியாமலே
செத்து மடிகின்றாய்
கற்பை விற்றுவிட்டு பின்
கற்பளிப்பு கூப்பாடு ஏன்?
வாக்குக்கு நீ வாங்கியதே
உன் வாய்க்கு அரிசியாக மாறியதோ
வீட்டுக் காவலுக்கு திருடனை வைப்பாராம்
பின்னர் கொள்ளை போய்விட கூப்பாடு போடுவாராம்
ஆனாலும் இவர் நல்லவராம்
அரசியல்வாதி எல்லாம் அயோக்கியராம்
வோட்டுக்கு நோட்டு இனி
ஒழியட்டும் இவ்விளையாட
மேகம் விட்டு வீழ்ந்த நீ என்
தேகம் தொட்டு செல்வாயோ
நாணம் கொண்ட நங்கையினை-நீ
நடனம் கொள்ள வைப்பாயோ
தோகை கொண்ட மயிலுமானேன்-நீ
தோளில் பட்டு படர்கையிலே- நான்
கானம் பாடும் குயிலுமானேன்-என்
தாளை விட்டு நழுவயிலே- உன்னில்
கரைந்தாட விரும்புகிறேன்
மண்ணில் - நீ
விழுந்தாடும் வேளையிலே.....
மாயம் செய்யும் மழையே எனை
காயமுற செய்யாதே- என்
மைவிழியை கரைத்த போதும்-என்
மெய் முழுதும் நனைத்த போதும்-
உனில்
மையல் கொண்டு தவிக்கின்றேன்-நீ
மையம் கொள்ளும் நாட்களுக்காய்.....
௮ண்டம் அலரும் அணுவே
கண்ணுக்குத் தெரியா காலனே
கோள உருவே கோரத்தாண்டவமே
சீனத்தில் உருக்கொண்டு எமை சிதறடிப்பவனே
தொட்டோ தெடாமலோ அண்டிக்கொண்டு
எமை அடிமையாக்கி வீட்டுச்சிறையில் விதிமுடிப்பவனே
வல்லரசு என மார்தட்டியவரை யெல்லாம்
மண்டியிட செய்தவனே...
கொரோனா எனும் கூற்றுவனே...
இயற்கையை இனிமையாக்கி
எமை மட்டும் இம்சிபதேன்
மானிடனே...
ஆலை அமைத்தாய் அது சரி
ஆனால் அறமிழந்து காற்றையும் கடலையும்
ஆறு அண்டமென அனைத்தயும் அசுத்தமாக்கினாயே
வாகனப்புகையால் வாயுவையும் மாசாக்கினாயே
குழந்தையை கூட கொஞ்ச நேரமில்லாமல்
காசு பணமென காற்றாய் அலைந்தாயே
உனது ஜம்பது ஆண்டு தவற்றை
நான் ஜந்து வாரங்களில்
தூய வானம்
துயிலெழும் ஆதவன்
ஆதவனின் முத்தத்தில்
நாணுகின்ற நாணல்
சில்லென்ற பூங்காற்று
சிலிர்க்கின்ற என்னவள்
தூய நீரோடை
துள்ளியெழும் மீன்கள்
வைகறை பொழுது
வரவேற்கும் குயிலோசை
பூமியின் சிரிப்பாய்
புன்னகைக்கும் பூக்கள்
இத்தனையும் ரசிக்க
இறைவன் படைத்தது
எங்களை மட்டுமா?
உங்களையும் தான்....
அண்ணாவின் தம்பியே - தமிழ்
அன்னையின் தவப்புதல்வனே
(தமிழ்) தாயைக் காத்த தனையனே
திரைக்கதை நாயகனே - உந்தன்
தீபொறி வசனத்தால் மண்ணில்
தமிழைத் தீயாய் வளர்த்தவனே
அணைத்து சாதியினரையும்
அர்ச்சகராக்கி அழகு பார்த்தவனே
சமூகநீதி காத்தவனே
உதயசூரியன் உதிக்குமுன்னே தினம்
விழிக்கும் தமிழ்சூரியனே
கவிஞர்களின் காதலனே
தமிழின் காதலியே
உன் கவிதைகள் இங்கே
உந்தன் கரகரத்த பேச்செங்கே?
உன் புரட்சி கருத்துகள் இங்கே
உந்தன் புன்னகை எங்கே?
என் உயிரிணும் மேலான
உடன் பிறப்பே... என்பாயே
உந்தன் உடன்பிறப்புக்கள் இங்கே
உன் உயிர் எங்கே?
தண்டவாளத்தில் தலைவைத்தது முதல்
உன் கடைசி இடத்திற்காக கண்ணுறங்கியபடி
மனசுக்குள் நகரும்
மலர்நதி நீ
இதயத்தில் இறங்கும்
உயிர்மழை நீ
தேய்தல் இல்லாமல்
வளர்தல் இல்லாமல்
இமைகளுள் ஒளிரும்
பௌர்ணமி நீ
அலையும் இல்லாமல்
கரையும் இல்லாமல்
அன்பால் நிறையும்
ஆழ்கடல் நீ !
கவிதைக் காட்டின் மூங்கில் நான் .
கனவுப் பூவின் வாசம் நான் .
மூடிய இமைக்குள் மின்னல் நான் .
முடிவே இல்லா நேசம் நான் .
--இளவெண்மணியன்
என் நிழல் நிஜமானது
நான் அப்பா ஆனேன்
என் பிம்பம் நீயன்றோ
எனது எண்ணம் உனதன்றோ
உன்னை மெய்யில்
சுமந்தது தாய்யெனினும்
மெய்யே... உன்னை மனதில்
சுமந்தது நானன்றோ
தூளியில நீ ஆட
துள்ளியது என் மனமே
துள்ளிவந்து நீ அணைக்க
சுவர்க்கம் மண்ணில் வந்ததென்ன
நீ கொஞ்சும் மொழி பேசயில
நான் குழந்தை ஆனதென்ன
தத்தி தத்தி நீ நடக்க
தந்தை உள்ளம் பதைத்ததென்ன
பள்ளியில நீ படிக்க
நான் பாடம் கற்றதென்ன
வாழ்கையை நீ படிக்க
வரலாறாய் நான் ஆனதென்ன
பரந்த இப்பூமியும்
பல்வேறு உயிரினமும்
உனை செதுக்கும் உளியாகும்
பொற்சிலையே...
இதை நீ உள்வாங்க
உன் வாழ்க்கை ஒளியாகும்.